அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி ஸ்மிரிதி இராணியின் உதவியாளர் ஒருவர் நேற்று இரவு 11.30 மணிக்கு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் . லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமாக தோல்வி அடைந்து இருக்கிறது.
மிக முக்கியமாக அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்துள்ளார். அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இராணி வெற்றிபெற்றுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய கலக்கத்தை தந்துள்ளது.
இந்த நிலையில்தான் அமேதி தொகுதி பாஜக எம்.பி ஸ்மிரிதி இராணியின் உதவியாளர் சுரேந்திர சிங் நேற்று இரவு 11.30 மணிக்கு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாருலியா கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகே வைத்து இந்த கொலை நடந்துள்ளது. 2 பேர் சேர்ந்து சுரேந்திர சிங்கை துப்பாக்கியால் சுட்டதாக முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளது.
சுரேந்திர சிங் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். இவர் ஸ்மிரிதி இராணிக்கு மிகவும் நெருக்கமானவர். இவர்தான் ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் வகையில் அமேதியில் மக்களுக்கு ஷூக்களை வாங்கி பரிசளித்தார்.
ராகுல் அங்கு பிரச்சாரம் செய்ய வந்த போது, மக்களுக்கு சுரேந்திர சிங் ஷூக்களை இலவசமாக கொடுத்தார். காங்கிரஸ் கட்சியினருக்கு பெரிய அதிர்ச்சியை அளித்தது. இது தொடார்பாக பிரியங்கா காந்தியே நேரடியாக புகார் அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுரேந்திர சிங் மீது காங்கிரஸ் கட்சியினர் பலர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தனர்.இந்த நிலையில்தான் சுரேந்திர சிங் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
சுரேந்திர சிங் கொலை அரசியல் தொடர்பான கொலை என்று பாஜக கூறியுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க அமேதி போலீசார் தனிப்படை அமைத்து இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்து இரண்டே நாளில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பது பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்தியா முழுவதும் பாஜக வெற்றிக்கு வித்திட்ட ‘EVM செட்டிங்’ முறையை வெளியிடுவேன் என்று மிரட்டியதால் பாஜக தரப்பே இவரை ‘போட்டுத் தள்ளியதா’ என்ற கோணத்தில் விசாரிப்பதாக லக்னோ டுபாக்கூர் போலீஸ் அதிகாரி தெரிவிக்கிறார்.