பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டதை தொடர்ந்து மேற்கண்டவாறு கப்சா உரை ஆற்றினார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர்களும் பதவியேற்றுக் கொண்டனர். நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக தனிபெரும்பான்மையுடன் இரவு 7 மணிக்கு பாஜக அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்த நிலையில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து 4.30 மணிக்கு வந்து பிரதமரை சந்திக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது என தெரியவந்தது. இதிலிருந்து ஓரளவுக்கு யார் யாருக்கு அமைச்சர் பதவி என்பது குறித்து தெரியவந்தது.

டெல்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி தொடா்ந்து இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மக்களவைத் தோ்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், நரேந்திர மோடி தொடா்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மோடி உள்பட 25 மத்திய அமைச்சா்கள், 24 இணை அமைச்சா்கள், 9 தனிப்பொறு இணை அமைச்சா்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இதையடுத்து 7 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலில் தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் செய்து வைத்தார். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முதல்முறையாக அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். நரேந்திர மோடி (வாரணாசி, உ.பி.)- பிரதமர் ராஜ்நாத் சிங் (லக்னோ, உ.பி.) அமித்ஷா (காந்தி நகர் -குஜராத்) நிதின் கட்கரி (நாக்பூர் – மகாராஷ்டிரம்) சதானந்த கவுடா (பெங்களூர் வடக்கு) நிர்மலா சீதாராமன் (ராஜ்யசபா உறுப்பினர்) ராம்விலாஸ் பாஸ்வான் (பீகார்)

நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஹர்சிம்ரத் பாதல், தாவர்சந்த் கெலாட், எஸ் ஜெய்சங்கர், ரமேஷ் போக்ரியால், அர்ஜுன் முண்டா, ஸ்மிருதி இரானி, ஹர்ஷவர்தன், பிரகாஷ் ஜாவடேகர். பியூஷ் கோயல். தர்மேந்திர பிரதான். முக்தார் அப்பாஸ் நக்வி. பிரகலாத் ஜோஷி. மகேந்திரநாத் பாண்டே. அரவிந்த் கண்பத். சாவந்த், கிரிராஜ் சிங். கஜேந்திர சிங் ஷெகாவாத், சந்தோஷ்குமார், கங்வார் ராவ், இந்தர்ஜித் சிங், ஸ்ரீபத் நாயக், ஜிதேந்திர சிங் கிரண்ரிஜிஜூ, பிரகலாத் பட்டேல், ராஜ்குமார் சிங், ஹர்தீப் சிங், புரி மன்சூக், லக்ஷமன் மாண்டவியா, ஃபகன் சிங், அஸ்வினி குமார் சவுபே, அர்ஜூன்ராம், மேக்வால், வி.கே. சிங், கிரிஷ் பால் குஜார், தாதாரோ பட்டேல், கிஷன் ரெட்டி, பிரதாப் சந்திர சாரங்கி, கைலாஷ் சவுத்ரி, ரத்தன் லால் கட்டாரியா, வி.முரளிதரன், ரேணுகா சிங், சோம் பர்காஷ், ராமேஷ்வர், தேவி தோத்ரே, சஞ்சய் ஷாம் ராவ், சுரேஷ் சன்னபசப்பா, தேவஸ்ரீ சவுத்ரி, புருஷோத்தம் ரூபாலா, ராம்தாஸ், அத்வாலே, நிரஞ்சன் ஜோதி, பாபுல் சுப்ரியோ. சஞ்சீவ் பல்யாண். கேபினெட் அமைச்சர்களாக 25 பேரும், இணை அமைச்சர்களாக 24 பேரும், தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக 9 பேரும் பதவியேற்றுக் கொண்டனர்.

மோடியின் டூப் உரையைக் கேட்ட நமது கப்சா நிருபர் ரத்தம் கொதித்தது. “உங்க நடிப்பை 5 வருசமாக பார்க்கிறோமே, நீங்கள் பின்னாடியும் கழுவுவீங்க, முன்னாடியும் சுடுவீங்க கொலைகார கும்பல்” என அங்கலாய்த்தார் நமது கப்சா நிருபர்.

பகிர்