நேற்றிரவு ஜெயமோகன் பார்வதிபுரத்தில் வீட்டின் அருகே உள்ள கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது தோசை மாவு வாயில் வைக்க முடியாத அளவுக்கு மிகவும் புளித்துப்போயிருந்துள்ளது. இதையடுத்து கடைக்கு மீண்டும் சென்ற ஜெயமோகன், மாவு புளித்துப்போயிருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனக்கு அந்த தோசை மாவு வேண்டாம் என்றும் கூறியுள்ளார் ஜெயமோகன்.
இதனால் கடைக்காரர் செல்வத்துக்கும், எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது கடைக்காரர் செல்வத்துடன் சேர்ந்து அங்கிருந்த சிலரும் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெயமோகன் வடசேரி காவல்நிலையத்தில் மளிகைக்கடைக்காரர் செல்வம் மீது புகார் அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் கடந்த 5ம் தேதி இரவு நடந்தது. இதில், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம் என்று கூறினார்.
இதுகுறித்து, முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்எல்ஏவுமான கருணாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ராஜராஜ சோழன் குறித்து பிழையானவற்றை பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழன் என்பவன் இந்தப் பூமிப்பந்தின் மனித அதிசயம். தமிழர் மரபின் உச்சம். நீங்களும் இந்த தமிழர் இனத்தில் பிறந்தவன் என்று பெருமைபட்டுக் கொள்ளுங்கள். அதைவிடுத்து பார்ப்பனர்களின் பங்காளியை போல் எதிர்வரிசையில் நின்று கொக்கரிக்காதீர். தமிழர் முன்னோர்களின் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். பிழையானவற்றை பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இது அறிவுரை கலந்த எச்சரிக்கை என்று கூறினார்.
இந்த நிலையில், பனங்காட்டு படை கட்சியின், ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ராஜ ராஜ சோழனை குறித்து அவதூறாக பேசியதை நாடார் சமூகம் வன்மையாக கண்டிக்கிறது. இது சாதிய மோதல்களை உருவாக்க முக்கிய காரணமாக அமையும் என்றார். கண்டனம் மேலும், “ரஞ்சித்தை நேரில் பார்க்கும் உண்மையான தமிழன் யாராக இருந்தாலும், மாமன்னர் ராஜ ராஜ சோழனை அவதூறாக பேசியதற்காக அவரை செருப்பால் அடிக்க வேண்டும்” இவ்வாறு மேலும் சில வார்த்தையை பயன்படுத்தி, கடுமையாக சாடினார், ஹரி நாடார்.
சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்த இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராஜ ராஜ சோழன் குறித்து அவதூறு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இயக்குநர் ரஞ்சித் அணுக்கழிவுகளை பற்றி பேசாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழர்களின் கட்டடக்கலையை உலகளவில் பறைசாற்றிய மன்னர் ராஜ ராஜ சோழனை அவன், இவன், அயோக்கியன் என்றும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார் ரஞ்சித். சோழ மன்னரை விமர்சித்த ரஞ்சித்துக்கு பல்வேறு தரப்பினரும் இந்து அமைப்பினரும் மாறுவேடத்தில் மளிகை கடைகளில் பதுங்கி உள்ளனர். ரஞ்சித் தோசை சுட ஈரமாவு வாங்க வரும்பொழுது ஜெயமோகன் மெது நடந்தது போல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகாத செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.