“100 தடவை சொல்லிட்டேன்.. ஏன் மரத்தை வெட்டினேன், எதுக்கு வெட்டினேன்னு.. ராமதாஸ்..ன்னா மரம் வெட்டியா? ஏன்டா.. நாய்ங்களா.. இன்னும் அசிங்கமா திட்டணும்” என்று செய்தியாளர்களை தரக்குறைவாக டாக்டர் ராமதாஸ் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ், “வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்” என்ற தலைப்பில் கலந்து கொண்டு பேசினார். தன்னிடம் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புவதாகவும், பலமுறை பதில் அளித்தும் மீண்டும் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புகிறார்கள் என்றும் கடிந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதுதான் இது: “டெலிகிராப்-ன்னு ஒரு பத்திரிகை. கல்கத்தாவில இருந்து வருது அந்த பத்திரிகை. அதன் நிருபர் கேக்கறான், “சார்.. மரத்தை வெட்டிட்டீங்களே ஏன்?” அதுக்கு நான் சொன்னேன், இதுக்கு நான் 100 தடவை பதில் சொல்லிட்டேன்.

திரும்ப திரும்ப அதையே கேட்கறீங்களே.. என்ன நோக்கத்திற்காக கேட்கறீங்க? ராமதாஸ் என்பவன் மரத்தை வெட்டறவன்னு தெரியாத மக்களுக்கும் திரும்ப திரும்ப தெரியப்படுத்தனும்தானே இந்த கேள்வியை கேட்கிறே?ன்னு நான் திருப்பி கேட்டேன்.

இனிமே ஏதாவது போராட்டம் பண்ணா, மரத்தை எல்லாம் வெட்ட மாட்டோம், இப்படி கேள்வி கேக்கற ஆளை வெட்டி போட்டுட்டு அப்பறம் போராட்டம் பண்றோம்னு சொன்னேன் (பலத்த கைதட்டல்).

உடனே எழுந்துட்டான், என்ன ஐயா இப்படி பேசறீங்கன்னு கேட்டான். பின்னே என்ன? மரம் வெட்டியா? 100 தடவை கேட்டாச்சு இதையே. இன்னொருத்தன் கூலா சொல்றான், 101-வது தடவை பதில் சொல்லுங்களேன்னு சொல்றான்.

அப்போ மக்களுக்கு 101-வது தடவையும் நான் ஏன் மரத்தை வெட்டினேன், எதுக்கு வெட்டினேன்னு தெரியணுமா? ராமதாஸ்…ன்னா மரம் வெட்டி? சிரம் வெட்டி சின்னப்பதாஸ்டா! ஏன்டா.. நாய்ங்களா.. இன்னும் அசிங்கமா திட்டணும்..

நான் வச்ச தேக்கு மரத்தை வந்து பாருங்கடா. ஒரு லட்சம் ரூபாய் பரிசு தரேன்னு சொல்லி இருக்கேன். எந்த நாய்ங்களும் வந்து பார்க்கலை. நான் வச்ச மரத்தை யாரும் பார்க்கல. வனமே வெச்சிருக்கன் அறக்கட்டளையில!

சண்டாள பசங்களா.. எதுக்கு இதை சொல்றேன்னா, இந்த படைப்பாளிகள் பேரியக்கம் மூலமாக நம்ம நோக்கத்தை நம்ம மக்கள்கிட்ட கொண்டு செல்வோம். நாம எந்த மக்களுக்கும் எதிரானவர்கள் கிடையாது. எந்த சாதி, மதத்துக்கும் எதிரானவர்கள் கிடையாது. எல்லாருக்காகவும்தான் இந்த ராமதாஸ் போராடிட்டு இருக்கான்” என்றார்.

நமது கப்சா நிருபர்: “ராமதாஸின் மரணத்துக்குப் பிறகும் மரவெட்டி அடையாளம் போகாது. படித்த மனுஷன் போலவோ, ஒரு கட்சியின் தலைவன் போலவோ பேச முடிகிறதா இந்த சண்டாள மரவெட்டி நாய் – ராமதாஸ். (அவருடைய வசனம் தான்) பணம், பணம், பணம் மட்டுமே குறிக்கோள். பதவி கூட முக்கியத்துவம் கிடையாது. 1000 கோடி தாரேன் கட்சியை கலைச்சிடுன்னு சொன்னா உடனே கலைச்சுடுவார். எவ்ளோ அசிங்க படுத்தினாலும் திரும்ப வர்றியே நீ எல்லாம் திருடித்திங்கிற பிரியாணியில உப்பு போட்டு சாப்பிடுறியா? ஊர்ல இருக்கிற மரத்தை வெட்டி விட்டு, இவன் தோட்டத்தில் மரம் வளர்ப்பதை பெருமையாய் பேசுகிறான். இதில் பசுமை தாயகம் என்று பேசுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. இதுதான் இவனுடைய உண்மையான முகம்.. வெட்டுவது..அது மரமானாலும் சரி..மனிதனானாலும் சரி….கோவப்பட்டு உண்மையா பேசிட்டான்.” என்று முடித்தார்.

பகிர்