அமமுக கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் ஒன்றும் தளபதிகள் அல்ல. அவர்கள் வெறும் நிர்வாகிகள்தான் என டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார். டிடிவி தினகரனுக்கு பக்கப்பலமாக இருந்த செந்தில் பாலாஜி தேர்தலுக்கு முன்னரே திமுகவில் இணைந்து தற்போது அரவக்குறிச்சி எம்எல்ஏவாகி விட்டார். எனினும் அமமுக போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இதையடுத்து தங்கதமிழ்ச் செல்வன், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் முறையே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சென்றுவிட்டனர். அதுபோல் தினகரனுக்கு ஆதரவாக இருந்த அதிருப்தி எம்எல்ஏக்களான ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் மீண்டும் அதிமுகவிலேயே தொடர்வதாக அறிவித்து விட்டனர். இப்படி அடுத்தடுத்து நிர்வாகிகளை இழந்து வரும் டிடிவி தினகரன் இன்றைய தினம் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது அமமுகவுக்கான புதிய நிர்வாகிகளின் பட்டியலை காண்பித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில வாரமாகவே சசிகலா உடல்நலமில்லாமல் இருக்கிறார் என்ற ரீதியில் தகவல்கள் வெளிவந்தன. உண்மையில், அவர் மிக ஆரோக்கியமாக இருக்கிறார். உடல்நலனில் எந்தப் பிரச்னையும் இல்லை. விரைவில் சிறையைவிட்டு வெளியே வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அ.ம.மு.க-விலிருந்து ஒவ்வொரு நிர்வாகிகளாக விலகிச் செல்வது குறித்து, சில விஷயங்களை விளக்கியிருக்கிறார் தினகரன்.
தங்க தமிழ்ச்செல்வன் விலகியதற்கான தனிப்பட்ட காரணங்கள், இசக்கி சுப்பையாவுக்கு அரசுத் தரப்பில் இருந்து வர வேண்டிய கான்ட்ராக்ட் பணம் உள்ளிட்ட விவரங்களைக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டுக்கொண்ட சசிகலா, `நம்மிடம் அவர்கள் நன்றாகத்தானே இருந்தார்கள். ஒவ்வொருவராக விலகிச் செல்வது நல்லதில்லை. இனி யாரும் நம்மிடமிருந்து விலகிச் செல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்’ எனக் கூறியிருக்கிறார்.
இதையடுத்து சசிகலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அமமுகவிலிருந்து விலக முடிவெடுத்த பின்னர் என் மீது குறை கூறிவிட்டு விலகி சென்றுள்ளார் இசக்கி சுப்பையா. விலகி சென்றவர்கள் எல்லாம் தளபதிகள் அல்ல. வெறும் நிர்வாகிகள்தான் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
நான் என்றைக்கு என்னுடைய திமிர்தனமான பேச்சை நிறுத்துகிறேனோ அன்று தான் உருப்படுவேன்… சும்மா வாயில் இருந்து மட்டும் தான் வார்த்தை வருகிறது ஆனால் உள்ளுக்குள் நிறையவே உதறலில் தான் உள்ளேன்… வ்ன்னை போன்ற ஒரு கிருக்கனை அரசியல் களத்தில் இதுவரை யாரும் கண்டதில்லை… கைக்கு கிடைத்த அதிமுக என்னும் பெரிய கட்சியை கைநழுவ விட்டு விட்டு இப்போது சும்மா வாய்க்கு வந்தபடி புலம்பிக்கொண்டு இருக்கிறேன். அண்ணா கலைஞர் ஜெயலலிதா காலத்தில் ‘கட்சித்தாவல்’ இருந்தது..என் கட்சியே இப்ப ‘தாவலில்’ இருக்கிறது என்று நம்பத்தகாத வட்டாரத்தில் டிடிவி புலம்பியதாக செய்தி ஒன்று வலம் வருகிறது.