திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் என்பதால் உதயநிதி நியமனத்துக்கு விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என்று கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதை நண்பர் உதயநிதி தனது நடவடிக்கையால் மாற்றுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து அவரது நெருங்கிய நண்பரும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் என்பதால் உதயநிதி நியமனத்துக்கு விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதை நண்பர் உதயநிதி தனது நடவடிக்கையால் மாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த தருணத்தை மிக மகிழ்ச்சியான தருணமாக உணர்கிறேன்.

நான்கு தலைமுறையாக எங்கள் குடும்பத்திற்கு இடையே நட்பு உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்காக உதயநிதி பாடுபடுவார். ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் செய்யாமல் உதயநிதி இந்த இடத்தை அடையவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி மக்களை வெகுவாக ஈர்த்தார்.

அவரது பிரச்சாரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் உதயநிதி எந்த பதவியையும் விரும்பவில்லை. இளைஞரணியில் பதவி வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. கட்சியின் வளர்ச்சிக்கு தன்னுடைய பங்கு, இருக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டார்.

திமுக நிர்வாகிகள் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி பொறுப்பு தர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினை நெருக்கினார்கள். அனைத்து மாவட்ட செயலாளர்களும் இந்த கருத்தை தீர்மானமாகவே முன் மொழிந்தார்கள். அதனால் தான் உதயநிதிக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது ” என்றார்.

திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லை என்றாரே கருணாநிதி.. இப்ப உதயநிதி நியமனம் என்னவாம்.. என எச்.ராஜா கேள்வி எழுப்பினார். திமுக ஒன்றும் சங்கரமடமில்லை என கருணாநிதி கூறியிருந்த நிலையில் அவரது பேரன் உதயநிதி திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு திமுக ஒரு நம்பகத்தன்மை இல்லாத கட்சி என்பதற்கு இதுவே உதாரணம் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு சிலேடையாக பதிலளித்த ஸ்டாலின் ‘தி.மு.க ஒரு தனியார் குடும்ப கம்பெனி என்பது அகிலமும் அறிந்ததே… முன்பு மு.க குடும்ப சொத்தாக இருந்தது… இப்போது சுடலையாகிய என் குடும்ப சொத்தாக கம்பெனி கை மாறியிருக்கிறது… இனி வருங்காலத்தில் இது உதயநிதி குடும்ப சொத்தாக மாறும்… அதன்பிறகு உதயநிதியின் வாரிசு சொத்தாக மாறும்… ஆனாலும் எங்ககளுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்… பிறகு என்ன புது கம்பெனி ஓனர் நல்லா கல்லா கட்டுவான். உதயநிதி நியமனத்தால், திமுக விற்கு புதியதாக கோடிக்கணக்கில் நிதி ‘உதயம்’ ஆகும்’ என்றார்.

பகிர்