உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நிலவின் தென் துருவத்தை ஆராய ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டில் புறப்பட்ட சந்திரயான்-2, வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நுழைந்தது. நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைகோள் படிப்படியாக உயர்த்தப்பட்டு நிலவை நோக்கி பயணிக்க உள்ளது.
சந்திரயான்-2 விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ள செயல், நம் இஸ்ரோ விஞ்ஞானிகளின் வலிமையை பறைசாற்றுவதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். விஞ்ஞானத்தின் புதிய எல்லைகளை அளவிட 130 கோடி இந்தியர்களின் உறுதியை விளக்குவதாக, சந்திரயான்-2 விண்கலத்தின் பயணம் அமைந்துள்ளது.
ஒவ்வொரு இந்தியரும் இன்று பெருமிதம் கொண்டுள்ளனர். மேலும் சந்திரயான்-2 முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியடைய செய்யும். இது சந்திரனை ரிமோட் சென்சிங் செய்வதற்காக ஒரு ஆர்பிட்டரை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் நிலவின் நிலப்பரப்பில் இறங்கி ஆராய்ச்சி செய்ய லேண்டர்-ரோவரையும் கொண்டுள்ளது என பிரதமர் விளக்கியுள்ளார்.
சந்திரயான்-2 மிகவும் தனித்துவமானது, ஏனெனில் இது நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்ய உள்ளது. எந்தவொரு கடந்த கால ஆராய்ச்சிகளிலும் செய்யாத முயற்சியில், சந்திராயன் 2 ஈடுபட உள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் நிலவை பற்றிய புதிய தகவல்களை நமக்கு வழங்கும் என கூறியுள்ளார். இந்த பணி சந்திரனைப் பற்றிய புதிய அறிவை வழங்கும். சந்திரயான்=2 போன்ற முயற்சிகள் நமது இளைஞர்களை அறிவியல், உயர்தர ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை நோக்கி செல்ல மேலும் ஊக்குவிக்கும்.
விண்கலம் ஏவப்பட்டதை தனது அலுவலகத்தில் பெரிய திரையில் ரசித்து சப்பு கொட்டிய மோடி, டுபாக்கூர் பேட்டி அளித்தார். அதில், சந்திரயான்-2 விண்கலத்திற்கு நன்றி என குறிப்பிட்டுள்ள பிரதமர், “இத்திட்டத்தால் நிலவைப் பற்றிய நமது தற்போதைய அறிவு கணிசமாக வளரும், நான் உலக வரைபடத்திலேயே இல்லாத தீவுகள் வரை பிரபஞ்சம் முழுவதும் மக்கள் வரிப்பணத்தில் சுற்றிப் பார்த்து விட்டேன். அடுத்து நிலவு, செவ்வாய் கிரகம் செல்லவேண்டியது தான் பாக்கி, சினிமா நடிகர்கள் பயன்படுத்தும் கேரவன் போல் ஏற்பாடுகளை விண்கலத்தில் செய்து, நான் அதில் ஏறி ‘சொர்க்கத்துக்கு’ விசிட் அடிக்க உள்ளேன், மில்லியன் கணக்கில் செலவழித்து தங்க இழைகள் பதிக்கப்பட்ட விண்வெளி சூட் தைக்க என் வீட்டுக்கருகே உள்ள ஓட்டை தைக்கும் டைலரிடம் ஆர்டர் கொடுத்துள்ளேன். 2020இல் என் கனவு நனவாகும் என நினைக்கிறேன்” என அதிரடியாக கூறியுள்ளார்.