நீ வடக்கிலே கிழக்கு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு, கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிமுக மற்றும் திமுக எம்பிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

திமுக சார்பில் தேர்வான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் சண்முகம் மற்றும் வில்சன், அதிமுக சார்பில் சந்திரசேகர் மற்றும் மொகமது ஜான் ஆகியோரும் பதவியேற்றனர். அனைவருமே தமிழில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டது சிறப்பு.

இதனிடையே, வைகோவிற்கு, கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதை பாருங்கள்:

வாழ்த்துக்கள் வைகோ…
சிறுத்தைபோல் நடந்து சென்றாய்
செம்மொழி உறுதி பூண்டாய்
நிறுத்தவே முடியவில்லை
நீள்விழி வடித்த கண்ணீர்

போர்த்திறம் பழக்கு – விட்டுப்
போகட்டும் வழக்கு – உன்
வார்த்தைகள் முழக்கு – நீ
வடக்கிலே கிழக்கு

இவ்வாறு வைரமுத்து ‘உக்கிரமான’ தமிழ்ச் சொற்களால் வரிகளை அமைத்து வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எழுதிய ‘மட்டரகமான’ கவிதையின் மீதி கீழே தரப்பட்டுள்ளது:

வாசரோஜா வாடிப் போகலாமா
வா, சரோஜா வாடி, போகலாமா
நேசமணி தலையில்
நாசமாய் போன சுத்தி
விழுந்தது ங்…த்தா
விழுந்தது ங்…த்தா
எழுந்தான் வரிப்புலி
எழுந்தான் வரிப்புலி
பழந்தான் உன் கட்சி
பழம்தான் உன் கட்சி
சைக்கோக்கள் பலர் பார்த்துவிட்டேன்
சைக்கோக்கள் பலர் பார்த்துவிட்டேன்
வைகோ போல் ஒருவருமிலர்
வைகோ போல் ஒருவருமிலர்
வாழ்க நீ எம்மான்
ரஜினி படம் எஜமான்
இசைப்புயல் ரகுமான்
வாழிய வாழியவே..

வைக்கோவின் வரலாற்றை பார்த்து வைரமுத்துவின் சிறுநீர்வழிமாறி கண்வழியே வந்துவிட்டது! சினிமா வாய்ப்பில்லாத வைரமுத்து மனம் பிறழ்ந்து சின்மயி விவகாரத்தில் இருந்து தப்பிக்க திக்கு திசை தெரியாத குருட்டு கவிஞனாக இப்படி ஒவ்வொரு அரசியல்வாதியாக கைபிடித்து கால்பிடித்து பிழைப்பு நடத்த வேண்டி ஆகி விட்டதே என்று கோடம்பாக்கம் பட்சி புலம்புகிறது.

பகிர்