உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிகான டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் Man vs Wild நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமானதாகும்.

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்-ம் பெரும் புகழ் பெற்றவர். யாரும் செல்லாத காட்டுக்குள் சென்று பயணம் செய்வது, பாலைவனத்தில் நடப்பது, தண்ணீரில் குதிப்பது என்று அவரின் சாகசம் பிரமிக்க வைக்கும்.

மோடியின் டிஸ்கவரி எபிசோட் ஆகஸ்ட் 12-ம் தேதியன்று 180 நாடுகளில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகவுள்ளது. ஆனால் பிப்ரவரி 14, 2019 இந்தியர்கள் இந்த நாளை அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள். காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாள்.

இந்த தாக்குதலில் 43 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவை உலுக்கிய இந்தச் சம்பவம் நடந்த அதே நாளில் பிரதமர் மோடி பிஸியாக ஷூட்டிங் செய்துகொண்டிருந்ததாகவும் அது முடிந்த பின்னரே தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்ததாகவும் காங்கிரஸ் கட்சியினர் அப்போது குற்றம்சாட்டி வந்தனர்.

அவர் கூறியதாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘பிரதமரின் ஷூட்டிங் பிப்ரவரி 14-ம் தேதி நடந்தது என்பதை மறுக்க முடியாது. புல்வாமா தாக்குதல் நடந்த அன்று மாலை 3 மணிக்குத் தொடங்கிய ஷூட்டிங் 45 நிமிடங்கள் நடந்தது. உத்தரகாண்ட்டின் கார்பெட் தேசிய பூங்காவில் நடந்த ஷூட்டிங் முடித்து மோடி அங்கிருந்து புறப்பட்டு ருத்ரபூரில் நடந்த பேரிடர் மீட்பு மையம் திறப்பு விழாவில் கலந்துகொள்ளச் சென்றுவிட்டார்.

கார்பெட்டிலிருந்து ருத்ரபூர் சென்றுகொண்டிருக்கும் வழியில்தான் பிரதமருக்குத் தாக்குதல் தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது நான்கு மணி இருக்கும். அதை அறிந்ததும் முன்னரே ஏன் எனக்குக் கூறவில்லை எனப் பிரதமர் அருகிலிருந்த அதிகாரிகளிடம் கேட்டுக் கோபமடைந்தார்.

பின்னர் 4:45 மணிக்கு ருத்ரபூரில் இருந்தவாறே அதிகாரிகளுடன் போனில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ருத்ரபூர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் உடனடியாக டெல்லி திரும்பினார்” என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதற்கான ட்ரெய்லரை பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரப் பிரியர் ஆன மோடி மதத்தின் பெயரால் நடைபெறும் கொலைகளுக்கும் காரணமானவர் என நம்பப்படுகிறது. பாஜக ஆட்சியில்தான் முஸ்லிம்கள் மாட்டுக் கறிக்காக கொல்லப்படுகின்றனர். ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற சொல்லி முஸ்லீம் முதியவர் ஒருவர் கொல்லப்பட்டது போல் காட்டுக்குள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்லாத மிருகங்களையும் சுட்டுக் கொள்ள சொல்லப் போவதாக ‘ஷூட்டிங்குக்கு’ ஏற்பாடு செய்துள்ள டுபாகூர் குழு செய்தி வெளியிட்டுள்ளது.

பகிர்