ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் தற்போது புதிய அதிரடி முடிவு ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது.

மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.

அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அந்த மாநிலத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

இந்த சட்டங்கள் நீக்கப்பட்டு இருப்பதால் காஷ்மீரில் இனி யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க முடியும். இதற்கு முன் காஷ்மீரில் யாரும் நிலம் வாங்க அனுமதி இல்லாமல் இருந்தது. தற்போது அந்த நிலைமை மாறி உள்ளது. இனி காசு இருக்கும் யாரும் அங்கு நிலம் வாங்க முடியும்.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் நேற்றே (திமுக பின்புலம் உள்ள) பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடிவெடுத்து இருக்கிறது. இது தொடர்பாக சிலரின் போன்களுக்கு விளம்பர மெசேஜ்கள் கூட சென்று இருக்கிறது. இதனால் காஷ்மீரில் கொஞ்சம் கொஞ்சமாக பிற மாநில மக்கள் குடியேற வாய்ப்புள்ளது.

இந்த நிலையில்தான் வரும் நவம்பரில் காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. நவம்பர் தொடக்கத்தில் காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இதில் (கலந்து கொள்ள சன் குழுமம் வி.இ.பி பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளது)

இதன் மூலம் காஷ்மீர் இனி வரும் நாட்களில் வேகமாக முன்னேற்றம் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரில் இதன் மூலம் ஐடி நிறுவனங்கள் உட்பட தொழிற்சாலைகள் நிறைய தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் காஷ்மீரின் முகம் எதிர்காலத்தில் மாற்றம் அடைய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஏரி குளங்கள் ஆக்கிரமிப்பு செய்வதில்/கட்டப்பஞ்சாயத்தில் முதலிடம் வகிக்கும் திமுக தனது ஸ்லீப்பர் செல்களை / பினாமிகளை புதிய யூனியன் பிரதேசங்களுக்கு திருட்டு ரயிலில் அனுப்பு வைத்திருப்பதாக செய்தி கசிந்துள்ளது.

பகிர்