ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டப்பிரிவு 370 கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
இதற்கான சட்ட திருத்தம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரவு 8 மணி அளவில் டிவியில் தோன்றி, நாட்டு மக்களுக்கு, உரை நிகழ்த்தினார். மோடி நோக்கம் நரேந்திர மோடியின் உரையில் இரு அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதை யூனியன் பிரதேசமாக அறிவித்து உள்ளதன் மூலமாக, அந்த மாநிலம் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை பெறப் போகிறது என்று கூறுவது, மோடியின் முதல் நோக்கமாக இருந்தது. ஐஐஎம், ஐஐடி, எய்ம்ஸ் போன்ற அமைப்புகள் காஷ்மீருக்கு வரும் என்று அவர் கூறிய வார்த்தைகள் கண்டிப்பாக கணிசமான மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாக தான் இருந்திருக்கும்.
இந்திய மக்கள் லடாக் பகுதியில் மூலிகை பயிர்கள் செழிப்பாக இருப்பதையும், சூரிய ஒளி சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு இருப்பதையும் குறிப்பிட்ட மோடி, காஷ்மீர் ஒரு காலத்தில் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக விளங்கியதையும், திரைப்பட படப்பிடிப்புக்கான தலமாக இருந்ததையும் குறிப்பிட்டு மீண்டும் அதே போல மாறும் என்று தெரிவித்தார்.
இதன் மூலம் லடாக் மற்றும் காஷ்மீர் இந்தியாவின் பிற பகுதி மக்களின் வாழ்க்கையுடன் இணைந்த பிராந்தியமாக மாறப் போகிறது என்ற ஒரு ஆசை வார்த்தை விதைக்கப்பட்டது. இது இந்திய மக்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பாசிட்டிவ் சிக்னலாக பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் பிளான் இந்திய மக்களுக்கு காஷ்மீர் தொடர்பான ஒரு வரைபடத்தை மனதில் உருவாக்கியதுடன் நிற்காமல், பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் சாட்டையை சுழற்ற தவறவில்லை நரேந்திர மோடி. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் தூண்டுதலின் காரணமாக இதுவரை 42 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்ற தகவலை கூறியதோடு, இதுவரை காஷ்மீரில் வசிக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களால் அந்த மாநில சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் ஓட்டுப் போட முடியவில்லை..
இனிமேல் அது நடக்காது, அனைவருக்கும் சம உரிமை உண்டு என்று அதிரடியாக தெரிவித்தார். மேலும் ஜம்மு காஷ்மீர் தயாரிப்புகளை உலகமெங்கும் பிரபலப்படுத்தி ஊக்குவிக்க அனைத்து தொழில் நிறுவனங்களையும் மோடி கேட்டுக் கொண்டார். இதன் மூலம், ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக சர்வதேச வணிக சந்தையில், நிறுவிட வேண்டும் என்ற மாஸ்டர் பிளான் இதன் பின்னணியில் இருந்தது.
40 நிமிட உரை பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக காஷ்மீர் மக்களே இனிமேல் பதிலடி கொடுக்கப் போகிறார்கள். இளைஞர்களும், இனிமேல் அரசியல் மற்றும் சமூக முன்னேற்றப் பணிகளில் சமபங்கு வகிக்கப் போகிறார்கள் என்று கூறி, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அளிக்க மறக்கவில்லை மோடி. ஆகமொத்தம் தனது 40 நிமிட உரையில் மோடி இந்த இருபெரும் செய்திகளை சேர்க்க வேண்டியவர்களிடம் சேர்த்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
பாதுகாப்பு படைகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை சுற்றுலா தலமாக மாற்றப்படும். 370 சட்டப்பிரிவு நான் அண்மையில் காஷ்மீர் சென்றபோது அங்கு மின்சாரம், சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டிருந்ததை கண்டேன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகளை ஜம்மு காஷ்மீரில் இனி நடத்தலாம். திரைப்பட நிறுவனங்களை உருவாக்கலாம். 370 சட்டப்பிரிவு நீக்கத்தால் குழந்தைகள், பெண்களுக்கு தங்கு தடையின்றி மருத்துவ வசதி கிடைக்கும் என்றார்.
காஷ்மீரில் தற்போது நிலவிவரும் உண்மை நிலையை நேரில் கண்டறிவதற்காக காஷ்மீர் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் டி.ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்
அவர்கள் காஷ்மீருக்குள் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். “படப்பிடிப்புக்காக வரக்கூடிய சினிமா பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோர் மட்டுமே காஷ்மீருக்குள் இனிமேல் அனுமதிக்கப்படவேண்டும்” என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவு என்று அதிகாரிகள் கூறினார்கள். என டுபாகூர் செய்தி தெரிவிக்கிறது.