முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இடையில் நிலவி வரும் மோதல் காரணமாக தற்போது அவர் அமலாக்கத்துறை மூலம் குறி வைக்கப்படுகிறார் என்று கூறுகிறார்கள். கடந்த லோக்சபா பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய முதல் பட்ஜெட் குறித்து பேசிக்கொண்டு இருந்தார்.

அவர் பட்ஜெட் தாக்கல் செய்த பின் ப. சிதம்பரம் அதில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டினார். வரிசையாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதன்பின் மொத்தம் பட்ஜெட்டிற்கு விளக்கம் அளித்து 112 நிமிடம் நிர்மலா சீதாராமன் பேசினார். இதில் 45 நிமிடம் அவர் ப. சிதம்பரம் வைத்த குற்றச்சாட்டிற்குத்தான் பதில் அளித்தார்.

அந்த பட்ஜெட் விவாதத்தின் போதே நிர்மலா சீதாராமன் ப. சிதம்பரம் மீது கடுமையான கோபத்தில் இருந்தார். தன்னுடைய பேச்சில் 50 சதவிகிதத்திற்கு அதிகமான நேரத்தில் அவர் ப. சிதம்பரத்திற்கு பதில் சொல்லியே கழித்தார். இது அப்போதே பெரிய வைரலானது. வெளியிலும் அப்படித்தான் அதன்பின் தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரம் சரிந்து கொண்டே சென்றது.

இதை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் ப. சிதம்பரம். மோடியின் சுதந்திர உரையை பாராட்டிய ப. சிதம்பரம் அதே நாளில் நிர்மலா சீதாராமனை விமர்சித்தார். முக்கியமான புள்ளி விவரங்களுடன் ப. சிதம்பரம் நிதி துறைக்கு எதிராக அம்புகளை வீசினார். இது நிர்மலா சீதாராமனுக்கு பெரிய அளவில் நெருக்கடியை கொடுத்தது.

என்ன நெருக்கடி நிர்மலா சீதாராமன் முதல்முறை நிதி அமைச்சராக இருக்கிறார். அவர் பதவி ஏற்றத்தில் இருந்தே இந்தியாவின் பொருளாதாரம் சரியாக இல்லை. தொடர்ந்து பொருளாதாரம் சரிந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் ப. சிதம்பரமும் புள்ளி விவரங்களுடன் அவரை எதிர்ப்பது நிர்மலா சீதாராமனுக்கு பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது.

செக் வைத்தார் தன்னுடைய பதவிக்கு கூட இவரால் ஆபத்து வரலாம் என்று நிர்மலா சீதாராமன் அஞ்சி இருக்கிறார்கள். இதனால் கோபம் அடைந்த நிர்மலா சீதாராமன் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் அமலாக்கத்துறையை வேகமாக முடுக்கி விட்டு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஆதாரங்களை திரட்ட வைத்தார் என்கிறார்கள். இதில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ தீவிரம் காட்டியதும் நிர்மலா தரப்பிற்கு சாதகமாக இருந்தது.

இதுதான் தற்போது ப. சிதம்பரம் சிக்குவதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். விசாரணை ப. சிதம்பரத்தை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டு வருகிறது. அப்படி செய்தால் அவரை கட்டுப்படுத்த முடியும் என்று பாஜக நினைக்கிறது. இதனால்தான் அவருக்கு செக் மேல் செக் வைத்து மத்திய அரசு அவருக்கு நெருக்கி வருகின்றது என்கிறார்கள்.

ஜெயலலிதா பழிவாங்கும் படலத்தில் நள்ளிரவில் கருணாநிதியை ‘தூக்கியது’ போல அய்யயோ கொல்றாங்களே பாணியில் நடவடிக்கை எடுக்க போவதாக மத்திய அரசு டுபாகூர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

பகிர்