டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Man vs Wild நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானதாகும். இந்த நிகழ்ச்சி மூலம் உலகமும் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். அசாதாரண சூழல்களில் இருந்து ஒருவர் எவ்வாறு உயிர் பிழைப்பது என்பது குறித்த இவரது இந்த நிகழ்ச்சி பலரையும் கவர்ந்த ஒன்று.
ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, “18 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இது தான் தனது முதல் விடுமுறை” என்றார்.
இதனையடுத்து இயற்கை குறித்து பேசியவர், “இமயமலைக்கு பயணம் மேற்கொள்ளும் போது ஆன்மீகம் மட்டுமின்றி இயற்கையின் அதிசயமும் தன்னை வியக்க வைக்க தவறுவதில்லை” என்று கூறினார்.
பின்னர் பியர் கிரில்ஸ் ஒரு கட்டத்தில் மோடியை பார்த்து, பதற்றத்தை உணர்கிறீர்களா என்று கேட்கையில் அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, “என் வாழ்க்கையில் ஒருபோதும் பதற்றத்தை உணர்ந்தது இல்லை” என்று கூறினார்.
சமீபத்தில் இவர் மோடியுடன் காட்டுக்குள் சென்ற நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பியர் கிரில்ஸ் பங்கேற்கும் ’ட்ரெஷர் ஐலேண்ட்’ என்ற புதிய நிகழ்ச்சியின் படப்பிடிப்பு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு ஒன்றில் நடந்து வந்தது.
அப்போது பியர் கிரில்ஸ் கொடிய விஷத்தன்மை கொண்ட தேனீ ஒன்றால் தாக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் விஷத்தன்மையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேனீயின் விஷத்தால் அவரது முகம் முழுவதும் வீங்கி அடையாளம் தெரியாமல் இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் கூறுகையில், “எந்த மோசமான சூழலையும் சமாளித்துவிடும் பியர் கிரில்ஸ் தேனீயால் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
தேனீ கொட்டியதும் அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு வீங்கி விட்டது. அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்” என கூறியுள்ளார். அமெரிக்க உங்கள் கப்ஸா நியூஸ் நிருபரிடம் பேட்டியளித்த கிரில்லஸ் மக்கள் நலனில் அக்கறை காட்டாத, மதவாத அரசியல் செய்து முஸ்லிம்களை துன்புறுத்தும் மோடி போன்ற கொடிய உயிரினத்தை கூட சமாளித்து விட்டேன், ஆனால் என்னை கொட்டிய தேனீ மோடியை விட கொடூரமானதாக இருக்கும் என்று நினைக்கவில்லை என்றார்.