அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த முதல்வர் இ.பி.எஸ்., கூறுகையில், எதிர்பார்த்தபடி இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த லோக்சபா தேர்தலின் போது, எதிர்க்கட்சிகள் பொய்யான வாக்குறுதியை அளித்தனர். அதனை நம்பி ஓட்டு போட்டனர்.

ஆனால், தற்போது மக்கள் உண்மையை தெரிந்து கொண்டதால், அதிமுகவை வெற்றி பெற வைத்துள்ளனர். இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. தேர்தலில் உண்மையை சொன்னோம். நான், துணை முதல்வர், கூட்டணி கட்சிதலைவர்கள் ஒத்துழைப்போடு வெற்றியை மக்கள் அளித்தனர். தேர்தலுக்கு முன்னோட்டமான இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் நடைபெற்ற இடைத் தோ்தலில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தோ்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்றார் அ.ம.மு.க பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன்.

திருவாரூா் மாவட்டம் மன்னார்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற அமமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் அவா் செய்தியாளா்களிடம் பேசியது. சிறையில் இருந்து சசிகலா விடுதலையான பிறகு அதிமுகவில் இணைவார் என்ற செய்தி பொய்யாக பரப்பட்டு வருகிறது.

இதில் சிறிதும் உண்மை இல்லை. எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் நல்ல திட்டங்கள் என்பது ஏதுவும் நடைமுறைபடுத்தவில்லை. ஆளும் கட்சியா இருப்பதால் தான் இந்த கட்சியும் ஆட்சியும் நீடித்து வருகிறது.

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையில் அரசு நிர்வாகம் முழுமையாக செயல்படவில்லை. விசில் உள்ளிட்ட திரைப்படங்கள் சிறப்பு காட்சிகள் வெளியாவதற்கு தடுக்கும் அரசின் செயல் தேவையற்றது. திரை உலகினரை பலி(ழி)வாங்கும் செயல் ஆக உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. மேட்டூா் அணை மீண்டு நிரம்பியுள்ளது. ஆனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிக்கு தண்ணீா் சென்றடையவில்லை. தூா்வார ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் என்ன ஆனது என்பதை மக்கள் கண்காணித்து வருகின்றனா்.தோ்தல் நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள். உள்ளாட்சி தோ்தல் நடைபெறுமா என்பதே சந்தேகமாக உள்ளது. அப்படி நடைபெற்றால் அதில் அமமுக போட்டியிடும் என்றார்.

மேலும் கப்சா நிருபரிடம் கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு தினகரன் உளறியதாவது: “பழக்க தோஷத்தில் அமமுக தொண்டர்கள் அதிமுக பட்டனை அழுத்தி தேர்தலில் அதிமுக வெற்றி பெறக் காரணமாகி விட்டார்கள். இந்த கறுப்பு ஆடுகளை, ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடித்து கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பழக்க தோஷத்தில் சின்னம்மாவும் அதிமுகவில் வீட்டு வேலை செய்யப் போனாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை என்றார்.

பகிர்