திமுகவில் உள்ள சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் சரியான பணிகளை செய்வது இல்லையென்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புகார் சென்றுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. திமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சில எம்பிக்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நேற்று திமுக கட்சியின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் மிக கடுமையாக திமுக கட்சி நிர்வாகிகளை விமர்சித்தார். அவரின் பேச்சுக்கு பின் என்ன காரணம் என்று தற்போது விவரங்கள் வெளியாகி உள்ளது.

கட்சியில் சிலர் திருந்த வேண்டும். தங்களை திருத்தி கொள்ளாத திமுக நிர்வாகிகள், திருத்தப்படுவார்கள். நிர்வாகிகள் எப்போதும் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். என்னுடைய சக்தியையும் தாண்டி நான் உழைத்து வருகிறேன்.

யாரும் நம்மை கட்டுப்படுத்த முடியாது என்று திமுக நிர்வாகிகள் கருத கூடாது. நான் இருக்கிறேன். சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் நடக்கும். கட்சியின் வளர்ச்சிக்காக சர்வாதிகாரியாக மாறுவேன். தனிப்பட்டு எனக்காக அல்ல, கட்சி வளர்ச்சிக்காக என்று ஸ்டாலின் பேசி இருந்தார்.

இந்த நிலையில் ஸ்டாலினின் பேச்சிற்கு என்னதான் காரணம். கட்சிக்குள் என்னதான் நடக்கிறது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் திமுக எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறது. ஆனால் இதற்காக இதுவரை திமுக நிர்வாகிகள் யாரும் வேலையே பார்க்கவில்லை என்று புகார் வந்துள்ளது.

இதனால் கோபம் அடைந்த ஸ்டாலின்தான் நேற்று இப்படி நிர்வாகிகளிடம் பொறிந்து தள்ளி இருக்கிறார். நேற்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டதற்கு காரணமே இதுதான் என்று கூறுகிறார்கள். இந்த கூட்டம் முடிந்த பின் சில முக்கிய நிர்வாகிகளை ஸ்டாலின் அழைத்து தனியாக பேசி உள்ளார்.

அதோடு இன்று மாவட்ட செயலாளர்களை மட்டும் தனியாக அழைத்தும் பேசியுள்ளார். கட்சியில் புதிதாக பதவி பெற்ற சிலர் இப்படி செய்கிறார்கள். அவர்கள்தான் 2 தொகுதி இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடையவும் காரணம் என்று புகார் வந்துள்ளது.

அதேபோல் சில திமுக மாவட்ட செயலாளர்கள் ஆளும்கட்சி எம்எல்ஏக்களுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் . உள்ளூரில் சில ஆதாயங்களை பெற வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள். இதனால் திமுகவிற்குத்தான் பின்னடைவு ஏற்படுகிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை கட்டுப்படுத்த யாரும் இல்லை என்று நினைக்க வேண்டாம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பே ஸ்டாலின் லோக்சபா தேர்தலுக்கு முன் கட்சியில் முக்கிய உறுப்பினர்களை நீக்கியதுடன், பலரின் பதவிகளை மாற்றினார். தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கும் அதேபோல்தான் ஸ்டாலின் செயல்படுவார் என்று கூறுகிறார்கள். விரைவில் திமுகவில் பல மாவட்ட செயலாளர்களுக்கு அதிரடி செக் வைக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

மூலப்பத்திரப் பிரச்னை வந்ததில் இருந்து, யாரைப் பார்த்தாலும் நிலம் அளக்கும் “சர்வே அதிகாரி” யாகத் தெரிகிறார்கள். என்றார் ஸ்டாலின்.

பகிர்