ரஜினியுடன் எப்போது இணைவேன் என்று சொல்ல முடியாது, ஆனால் தமிழகத்திற்கு தேவைப்பட்டால் கண்டிப்பாக இணைவேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நேற்று சென்னையில் பேட்டி அளித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை மேம்படுத்துவதற்காக நானும் ரஜினியும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்பேன். அதுதான் நடக்க வேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக நடக்கும்.

நானும் ரஜினியும் இணைய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்றார். இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், மக்கள் நலனுக்ககாக நானும் கமலும் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்றார். அரசியலில் என்ன மாதிரியான அதிசயங்கள் வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறினார்.

இந்த நிலையில் இன்று மநீம கட்சி நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். அதில், ரசிகர்கள் கைதூக்கி விட்டதால் நான் இங்கே நிற்கிறேன். கட்சி உறுப்பினர்களின் அன்பு என்னை வியக்க வைக்கிறது. இந்த அன்பை நான் செயல் வடிவமாக, ஆக்கபூர்வமாக மாற்றுவேன். இதே அன்பை நான் தமிழகத்திற்கு கொடுப்பேன்.

இனி வரும் காலங்களில் என்ன மாற்றம் நடக்கும் என்று பார்ப்பீர்கள்.நாங்கள் அரசியலுக்கு வந்த பின் வேலைவாய்ப்பு மீது கவனம் செலுத்துவேன். வார்த்தைகள் மீது நாங்க நம்பிக்கை வைக்க மாட்டோம். நாங்கள் செயலில் காட்டுவோம்.

ரஜினியுடன் எப்போது இணைவேன் என்று சொல்ல முடியாது. நாங்கள் எப்போது இணைவோம் நீங்கள் எதிர் பாருங்கள். தமிழகத்திற்காக இணைவோம். நானும் ரஜினியும் தேவைப்பட்டால் கண்டிப்பாக இணைவோம்.

அனைவரின் கைகளும் இணைய வேண்டும். நட்பை விட எங்களுக்கு முக்கியம், தமிழக நலன். எங்கள் இணைப்பின் அவசியமே அதுதான். தமிழக மக்களுக்கு அவசியம் என்றால் கண்டிப்பாக நாங்கள் இணைந்து பணியாற்ற தயார், என்று குறிப்பிட்டார்.

ஆன்மீக அரசியலும் பகுத்தறிவு அரசியலும் எப்படி கூட்டணி வைக்க முடியும் என்ற எனது கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. முதல் கட்டமாக ஒரு சினிமா. பாட்டு கூட ரெடியாகி விட்டதாம்.

விக்ரம் பாதி தளபதி பாதி
கலந்து செய்த கலவை நான்

உள்ளே பாபா வெளியே சத்யா
விளங்க முடியா கதையே நான்

பாபா கொன்று பாபா கொன்று
சத்யா வளர்க்கப் பார்க்கின்றேன்…

ஆள வருவேன், காலை வாருவேன்
ஆக மொத்தம் ஆட்டைய போடுவேன்..

பேருதான் ;எந்திரன்-2′ வா
‘இந்தியன்-2’ வா ன்னு யோசிக்கிறாங்களாம் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம். இப்படி சினிமா பட தயாரிப்பில் இணைவோம் என்று ரஜினியும் கமலும் கூறியதை திரித்து அரசியல் சாயம் பூசி விட்டதாக மக்கள் நீதி மையம் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

பகிர்