கோயம்புத்தூரில் இளம்பெண் ராஜேஸ்வரி விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது.

கோவை பீளமேடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சிங்காநல்லூரைச் சேர்ந்த அனுராதா எனும் ராஜேஸ்வரி கடந்த 11-ம் தேதி காலை ஸ்கூட்டரில் பணிக்கு சென்றபோது, கோவை பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியில் சாலை தடுப்பு பகுதியில் அதிமுக கட்சி கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதில் ஒரு கொடிக்கம்பம் திடீரென்று சாய்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பத்தின் போது நிலைத்தடுமாறிய அவர் ஸ்கூட்டருடன் சறுக்கி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று ராஜேஸ்வரியின் கால்கள் மீது ஏறியது. இந்த கோர விபத்தில் அவரது இரண்டு கால்களும் லாரி சக்கரத்தில் சிக்கியதால் கால்கள் நசுங்கி படுகாயம் அடைந்துள்ளார்.

ராஜேஸ்வரியின் ஸ்கூட்டர் லாரி சக்கரத்துக்குள் மாட்டிக்கொண்டது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விஜயானந்த் (30) என்பவரும் லாரியில் மோதி காயம் அடைந்தார். கால்கள் முறிந்து படுகாயம் அடைந்த ராஜேஸ்வரிக்கு கோவை நீலாம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூரில் ராஜேஸ்வரி என்ற இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்து விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியின் வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயம்புத்தூரில் இளம்பெண் ராஜேஸ்வரிக்கு விபத்து நடந்த இடத்தில் கொடி கம்பம் ஏதும் இல்லை என்றார்.

மேலும், நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரியின் இடதுகால் அகற்றப்பட்டதாக மருத்துவமனை உறுதியாக கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், ‘விபத்து நடந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பமே இல்லை, அதிமுக அடிமைகள் பாஜகவுக்கு எடுபிடி ஆகி பல மாமாங்கம் ஆகிறது. மோடி சொல்படி தான் ஆட்சி நடந்து வருகிறது இது தமிழக மக்களுக்கும் நேற்று பிறந்த குழந்தைகளுக்கும் கூட தெரியும்’  என்று கூறியுள்ளார்.

இதையடுத்து,வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டு வழக்கிற்கு ‘பொங்கல்’ வைக்கப்பட்டு உள்ளது.

பகிர்