குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து தர்பார் பாடல் வெளியீட்டில் கருத்து தெரிவிக்காத ரஜினிகாந்த், தற்போது ட்விட்டரில் சம்பந்தமில்லாமல் சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போல் ரஜினி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் கோபத்தை எற்படுத்தி உள்ளது..

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலில் குதிக்கப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டாலும், முழு நேர அரசியலில் ஈடுபட சில காலம் பிடிக்கும் என்பது போல் அவரது பேட்டிகளில் விளக்கம் அளித்து வருகிறார். எனினும் நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்து பாஜக அரசுக்கு, குறிப்பாக இந்தத்துவாவிற்கு ஆதரவாகவே உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த நேரத்தில் நாட்டில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வருகிறது. இந்த சூழலில், டில்லி காவல் துறை போராட்டம் பரவுவதைக் கட்டுப்படுத்த ஏர்டல் உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனஙளின் உதவியை நாடியுள்ளது. குடியுரிமை சட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நள்ளிரவே, மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது.

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது நாட்டில் பெரும்பாலானோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அஸாம், மிசோரம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக எதிர்வினையைப் பெறத் தொடங்கியது. இதற்கு எதிராக மாநிலந்தோறும் மக்கள் லட்சக் கணக்கில் தெருக்களில் இறங்கிப் போராடத் தொடங்கினர்.

அதே வேளையில் நாடு முழுவதிலும் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் குதிக்க தொடங்கியது. குறிப்பாக டில்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் தர்பார் படப் பாடல் வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், “குடியுரிமை சட்டம் குறித்து இந்த மேடையில் கூறுவது சரியாக இருக்காது, நான் அதற்கான மேடையில் அது குறித்துக் கூறுகிறேன்” என்றார்.

அதன்பின் ரஜினி ட்வீட் செய்வார் எனப் பத்திரிகையாளர்கள் உள்பட அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கருத்து கூறுவதைத் தவிர்த்துள்ள ரஜினி, இப்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம் குறித்து கருத்து ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில், “எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண் வன்முறையோ, கலவரமோ ஒரு வழியாகி விடக் கூடாது. தேசப் பாதுகாப்பும், நாட்டு நலனையும் மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையோடும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறை எனக்கு வேதனை அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

இந்த பதிவு பல்வேறு கேள்விகளை ரஜினியை நோக்கி எழுப்பியுள்ளது. குறிப்பாக ரஜினி கூறியுள்ள வசனம் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி இப்போதே நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர். இதைக்கேட்டு வீட்டில் ரெஸ்டில் இருக்கும் கேப்டன் கப்சா பேட்டி கொடுத்துள்ளார். அதில், “குடியுரிமை பற்றி ரஜினிக்கு தெரிந்ததோடு எனக்குத்தான் நிறைய தெரியும். குடியால் சீரழிந்தவன் நான். தயாரிப்பாளரிடம் உரிமையாக சூட்டிங் முடிந்தவுடம் குடி வாங்கிக் குடித்ததாலேயே என் உடல் நலம் பாதித்து அரசியல் வாழ்க்கை அஸ்தமித்தது.  நான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக மாறி இருக்கக் கூடாது” என்று கூறினார்.

பகிர்