சகுனி, துரியோதனன் என்று சகட்டு மேனிக்கு திட்டியுள்ளார் நடிகர் சித்தார்த். ஆனால் யாரை என்றுதான் அவர் குறிப்பிடவில்லை. மோடி அமித்ஷா என்பது அனைவருக்கும் தெரியும்.

டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நேற்று தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க போராட்டம், பரவி வருகிறது.

இந்த நிலையில்தான், சித்தார்த் காட்டமாக ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். நடிகர் சித்தார்த் வெளியிட்ட ட்வீட்டில், அந்த இருவரும், கிருஷ்ணரும், அர்ஜுனரும் கிடையாது. அவர்கள் சகுனி மற்றும் துரியோதனன்.

பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துங்கள். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துங்கள். இவ்வாறு ட்வீட் செய்துள்ளார். அந்த இருவரும் என்று யாரை இவர் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது..

பீல்டு அவுட் ஆக்கி விடுவார்கள் என்று அதைப் பற்றி அவர் வெளிப்படையாக தெரிவிக்காமல் தவிர்த்துள்ளார்.

பாலிவுட் இயக்குநரும், நடிகருமான, அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ள ட்வீட்டில், இது ரொம்ப தூரம் போய்விட்டது. இனிமேலும், அமைதியாக இருக்க முடியாது. இந்த அரசு பாசிசப்போக்குடன் இருப்பது நன்கு தெரிகிறது.

உண்மையில், அமைதியாக இருக்க கூடிய குரல்களை பார்க்கும்போது இன்னும் கோபம் கூடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சித்தார் அளிக்காத ரகசிய பேட்டியில், எல்லாரும் நெல்லை காயப்போட்டார்களாம். எலி தன் பங்கிற்கு தன் வாலை காயப்போட்டதாம். அது போல நானும் கருத்து சொல்ல வந்தேன். என் படம் ஒன்னு கூட ஓட மாட்டேங்கிது. இப்படியே போனால் பாய்ஸ் படத்தில் அண்ணாசாலையில் அம்மணமாக ஓடியது போல் நாளை டில்லியில் செங்கோட்டைக்கு எதிரில் உள்ள சிக்னலில் ஓடவும் தயங்க மாட்டேன்.!” என்று கோபாவேசமாக அமுல் பேபி முகத்தைக் காட்டி ஆக்ரோஷமாக நடித்துக் காட்டினார்.

பகிர்