நாடாளுமன்ற செயல்பாடுகளில் உறுப்பினர்களின் பங்கேற்பு மற்றும் வருகை உள்ளிட்ட தகவல்கள் அரசுத் தரப்பில் நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இதில் தமிழக எம்.பி.,க்களில் ‘மிக மிக மோசமாக’ செயல்பட்ட எம்.பி.யாக அன்புமணியின் பெயர் இடம்பெற்றுள்ளது என்பதையும், இவர் 15 சதவீதம் மட்டுமே அவை செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளார் என்பதையும் விளக்கி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்தது.

அதனையே ஆதாரமாக கொண்டு பல்வேறு சேய்தி நிறுவனங்களும் அன்புமணியை பற்றி விமரிசனம் செய்து செய்தி வெளியிட்டன சென்னை தி.நகரில் உள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகம்.

இங்கு, பாட்டாளி மக்கள் கட்சியியைச் சேர்ந்த வினோபா தலைமையிலான குழுவினர் அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். தனது பொறுப்பில்லா போலி வேஷம் அம்பலமானதால் ஆத்திரமடைந்த அன்புமணியின் உத்தரவுப்படியே இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் மூலம் பா.ம.க ஒரு மரம்வெட்டி – வன்முறை கட்சி என்பது மீண்டும் மீண்டும் அம்பலமாகியுள்ளது. பா.ம.க மீது காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. “கூட்டணி” தர்மப்படி தனது கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று ராமதாஸ் முதல்மந்திரி எடப்பாடிக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கற்ற இந்த அரசிய ல் குடும்பம் எப்படி தமிழ் மக்களை சீரழிக்கிறது. அர்ப்பணிப்பு உணர்வே இல்லாத இவர்களுக்கு எப்படி தமிழக அரசியலில் இடம் கிடைத்தது? என்ற கப்சா நிருபர் கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி மரம் வெட்டும் காண்டிராக்ட் எடுத்து பிசி ஆனதால் பார்லிமெண்டுக்கு போக நேரம் கிடைக்கவில்லை என்று கோபமாக கூறினார்.

பகிர்