நெல்லை மேலப்பாளையம் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கூட்டம் ஒன்றில், சமீபத்தில், கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன், உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பாக ஆட்சேபிக்கதக்க கருத்தை பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரையும், ஒருமையில் விளித்து பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனரிடம் பாஜக மாவட்ட தலைவர் தயாசங்கர் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, நெல்லை கண்ணன் திடீரென நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். எனவே அவரை கைது செய்ய காவல்துறை யோசித்து.
இதையடுத்து நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி, பாஜக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று பெரும் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இதில், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் போன்ற சீனியர் தலைவர்கள் பங்கேற்றனர்.
விஷயம் பெரிதாகிக் கொண்டே போன நிலையில், காவல்துறை, நெல்லை கண்ணனை வலைவீசி தேடி வந்தது. அவர் திருவனந்தபுரம் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் பெரம்பலூரிலுள்ள ஒரு தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் இன்று இரவு கைது செய்யப்பட்டு உள்ளார்.
மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு நெல்லைக் கண்ணனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ட்வீட் வெளியிட்ட எச்.ராஜா, நெல்லை கண்ணனுக்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
‘ஆப்பரேஷன் சக்சஸ்’ என ட்வீட் போட்டு, நெல்லை கண்ணன் கைதான விவகாரத்தை முதலில் பிரேக் செய்துள்ளார், பாஜக தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரையும் இன்னும் ஏன் உயிருடன் விட்டு வைத்திருக்கிறீர்கள் என்ற நெல்லை கண்ணன் பேச்சுக்கு, இரண்டில் ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும் என்று கடந்த சில தினங்களாக தொடர்ந்து டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வந்த அதே எச்.ராஜாதான்.
மெரினாவில் இன்று, ராஜா தலைமையில்தான், பாஜக மூத்த தலைவர்கள், தர்ணா நடத்தி, நெல்லை கண்ணன் கைதுக்கு வலியுறுத்தினர். இந்த நிலையில், இன்று இரவு சுமார் 9 மணியளவில், நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட தகவல் ஊடகங்களுக்கு கிடைத்தது. அதற்கு அரை மணி நேரம் முன்பாகவே, எச்.ராஜா வெளியிட்ட ஒரு ட்வீட், நெட்டிசன்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
‘ஆப்பரேஷன் சக்சஸ்!’ இப்படி இரு வார்த்தைகளில், ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்தார். இவர் ஏன் இப்படி சொல்கிறார் என்பது பற்றி நெட்டிசன்களிடையே பெரும் விவாதமே நடந்தது. மெரினா போராட்டம் நல்லபடியாக நடந்தது என்பதை இப்படி சொல்கிறார் போல என பல நெட்டிசன்கள் கூறியிருந்தனர். ஆனால், அப்புறம்தான் தெரிந்தது, நெல்லை கண்ணன் கைதான தகவலைத்தான் ராஜா இப்படி சூசகமாக சொல்லியிருக்கிறார் என்பது.
இதன்பிறகு, சில ட்வீட்டுகளை எச்.ராஜா வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில், பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களையும், உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களையும் கொலை செய்யத் தூண்டும் வகையில் SDPI நடத்திய கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் புகார் கொடுத்த பாஜக நிர்வாகிகள், இந்து இயக்க சகோதரர்கள்… மேலும் இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்ட தாமரை சொந்தங்கள், இந்து இயக்க சகோதரர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றி கலந்த வாழ்த்துக்களை உவகையோடு உரித்தாக்குகிறேன்
தேசமும், தமிழகமும் காக்க நம் தர்ம போராட்டம் தொடரும்! மோடி பாணியில் ஆஸ்பத்திரியில் வைத்து சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி நெல்லை கண்ணண் கதையை முடிப்பேன், பாரத் மாதா கீ ஜெய்! இவ்வாறு எச்.ராஜா கப்சா பேட்டியில் கூறியிருந்தார்.