நடிகர் ரஜினிகாந்த் நடித்து நாளை வெளியாகும் தர்பார் திரைப்படம் வெற்றி பெற வேண்டி அவரது ரசிகர்கள் நூதன பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. வழக்கம் போல ரஜினி ரசிகர்கள் இதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் நூதன பிரார்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர்.

மதுரையில் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். இதேபோல் சில ரசிகர்கள் அலகு குத்தியும் தர்பார் வெற்றி பெற வழிபாடு நடத்தினர். பல இடங்களில் வித்தியாசமான வாசகங்களுடன் போஸ்டர்களையும் ரஜினி ரசிகர்கள் ஒட்டியும் உள்ளனர். ஏற்கனவே தர்பார் திரைப்படத்துக்கு சிறப்பு காட்சிகளை வெளியிட தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் காத்திருதனர். நாளை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில். சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, மல்டி பிளக்சில் படம் திரையிடப்படுகிறது. ரஜினியின் மெகா கட் அவுட்கள், தியேட்டர் முன் வைக்கப்படுகின்றன. இதற்கு, ஹெலிகாப்டர் மூலம் மலர் துாவ, சேலம் ரஜினி ரசிகர் மன்றத்தினர் போலீஸ் அனுமதி கோரினர்.

இதற்கு,அனுமதி அளிக்க போலீசார் மறுத்துவிட்டனர். சேலத்தில், ரஜினியின், ‘தர்பார்’ படம் வெளியாகும் தியேட்டரில் வைக்கப்படும், ‘கட் அவுட்’களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் துாவ, போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ரஜினி ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிக்கு ஜப்பானில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரின் முத்து படம் ஜப்பானில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த ரஜினி ரசிகர் யஷுதா ஹிதேதோஷி தர்பார் படம் பார்க்க சென்னை வந்துள்ளார். அவர் சென்னையில் உள்ள ரோஹினி தியேட்டரில் தமிழ் ரசிகர்களுடன் சேர்ந்து நாளை தர்பார் படத்தை பார்த்து ரசிக்க உள்ளார். யஷுதா ரஜினி படத்தை பார்க்க அவ்வளவு தூரம் வந்துள்ளதை தியேட்டர் எம்.டி. ட்விட்டரில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக யஷுதா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தை பார்க்கவும் சென்னை வந்திருந்தார். தற்போது மீண்டும் ரஜினி படத்தை பார்க்க சென்னை வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளதாக யஷுதா தெரிவித்துள்ளார். யஷுதா வந்துள்ள விபரம் அறிந்த ரஜினி ரசிகர்களோ தலைவர்னா சும்மாவா என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகமிருப்பது போல் டிரைலரில் தெரிகிறது. காடு வா வாங்குது வீடு போ போங்குது இதுல கலவரம் கேக்குது,,

ஜன.9ஆம் தேதி வெளியாகும் ‘தர்பார்’ சாதா ‘பாரா’ ஏ/சி ‘பாரா’ டாஸ்மாக் பார இல்லை அய்யர் ஓட்டல் சாம்’பாரா’ என ஒருநாள் பொறுத்திருந்தால் தெரிந்துவிடும். நிற்க சென்னை வந்த ஜப்பான் ரசிகர் ஹெலிகாப்டர் மலர் தூவல் நிகழ்ச்சிக்குப் பிறகு பாடியை எப்ப எடுப்பீங்க என்று மூத்த ரஜினி ரசிகரை கேட்டு அதிர வைத்தார் என கப்சா பிரஸ் ரிலீஸ் தெரிவிக்கிறது.

பகிர்