கரோனா அச்சுறுத்தலால் வரும் மார்ச் மாதம் மதுரை அழகர்கோயிலில் நடைபெறவிருந்த கிடா வெட்டி முடி இறக்கும் குடும்ப நிகழ்ச்சியை ரத்து செய்தார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள், பெரிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதுரையில் நடைபெறவிருந்த தங்களின் இல்ல விழா ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்தார் என்பது நினைவிருக்கலாம்.. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் பேரனுக்கு மதுரை அழகர்கோயில் முடி இறக்கி கிடா வெட்டும் நிகழ்ச்சி நடத்த ஏற்ப்பாடுகள் நடைபெற்ற நிலையில் கரோனா வைரஸ் தொற்று எதிரொலி காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பதாக அவர் விளக்கினார்.
தமிழக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “கரோனா வைரஸின் தாக்குதல் குறித்து மாநில முதல்வர்களிடம் விவாதித்த பிரதமர் மோடி “கரோனாவின் தாக்குதலை தடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசர அவசியம். இதில் பல மாநிலங்கள் பின்தங்கியிருப்பது கவலை தருகிறது. சமூக தொற்றினை கண்டறிவதில் அலட்சியமாக இருந்ததால்தான் சீனா, இத்தாலி, ஈரான் நாடுகளில் நோயின் தாக்குதல் கொடூரமாக இருந்தது.
வெளிநாடுகளிலிருந்து சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளை முழுமையாக சோதித்து அனுப்புங்கள். இதுவரை 6,700 பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். சமூக தொற்றாக இது மாறாமலிருக்க முழுமையாக கவனம் செலுத்துங்கள். மக்களை வீடுகளுக்குள்ளே தனிமைப்படுத்துவது ஒன்றுதான் வழி” என்று விவரித்தார். முதல்வர் எடப்பாடியிடம் பேசும்போது, “அரசின் நடவடிக்கையை விட உங்களின் சுகாதாரத்துறையின் நடவடிக்கைகள் ஓரளவுக்கு திருப்தியை தருகிறது. ஆனால், இண்டர்நேசனல், டொமஸ்டிக் ஏர்போர்ட்டுகளில் தெர்மல் டெஸ்டிங்கில் கவனம் செலுத்தவில்லை. இது சமூக தொற்று. எங்களுக்கு கிடைத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கும் நீங்கள் கொடுத்த பட்டியலுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன.
அதிகம் பரவியதற்கு பிறகு நடவடிக்கை எடுப்பதில் பலன் கிடையாது’ என்றிருக்கிறார் மோடி. இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தலைமைச்செயலாளர் சண்முகமும் விளக்கமளித்தனர். ஆனால், அதில் திருப்தியடையவில்லை பிரதமர்” என்று சுட்டிக்காட்டினார்கள் டெல்லி அதிகாரிகள். இதனையடுத்து தேசம் முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் சுய ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைப்பிடித்தனர். சில மாநிலங்களில் பிரச்சனைகள் இருப்பதையறிந்து அந்த மாநிலங்களை மீண்டும் எச்சரிக்கை செய்திருக்கிறார் பிரதமர். சமூக இடைவெளியை மக்களுக்கு புரிய வைப்பதிலும் அதனை ஏற்படுத்துவதிலும் சில மாநிலங்கள் தோற்றுக் கொண்டிருக்கின்றன என மோடிக்கு மத்திய சுகாதாரத்துறையினர் சொல்லி வருகின்றனர்.
தமிழக அரசு சொல்லும் புள்ளிவிபரங்களை விட அதிக பாதிப்பு இருப்பதாகவே தெரிகிறது. கரோனா தடுப்பில் இன்னும் வேகம் அதிகரிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு புரிந்துகொள்ளவில்லை. அண்டை மாநில அரசுகள் தங்கள் மக்கள் மீது வைத்துள்ள அக்கறை போல தமிழக அரசிடம் இல்லை. அதனால் கரோனாவை தடுக்க, மக்களை தனிமைப்படுத்துவதுதான் ஒரே வழி” என்பதை வலியுறுத்தியிருக்கிறார். சமூக இடைவெளியை மக்கள் உறுதி செய்வதிலும், நோயின் தீவிரத்தையும் அதன் பரவுதலையும் கண்டறிந்து அதனை தடுப்பதிலும்தான் எடப்பாடி அரசுக்கு சவால் காத்திருக்கிறது!
தனது பேரனின் காது குத்தல் நிகழ்ச்சியை ரத்து செய்த வில்லேஜ் விஞ்ஞானி தெர்மாகோல் ராஜூ கரோன வைரசைக் கட்டுப்படுத்த அன்டிவைரஸ் கண்டுபிடித்து, விஜயபாஸ்கரை ஓவர் டேக் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் நமது கப்சா நிருபர் தெரிவித்தார். ஆனால் மென்பொறியாளர்கள் கொத்தாக வீட்டிலிருந்து பணியாற்றி வருவதால், அவர்களை ஒருங்கிணைத்து அன்டிவைரஸ் உருவாக்குவதில் காலதாமதம் ஏற்படலாம். அதற்குள் பல உயிர்கள் பலியாகி விடலாம் என சயனைடு சயண்டிஸ்ட் செல்லூர் ராஜூ வருத்தம் தெரிவித்தார்.