பூஜாகுமாரைப் பிரிந்து கவுதமியுடன் மீண்டும் லிவிங்-டு-கெதரில் கமல்: கொரோனா போஸ்டர் ஒட்டி கமலை எச்சரித்த சென்னை மாநகராட்சி

513

நடிகை கவுதமி தனது வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டவில்லை என்றும், அப்படியே இனிமேல் ஒட்டினாலும் கவலையில்லை எனவும் கூறியுள்ளார்.
நடிகை கவுதமி வெளிநாட்டுக்கு சென்று திரும்பியதால் சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான நோட்டீசை அதிகாரிகள் ஒட்டினர். மேலும் அங்கு கிருமிநாசினி திரவத்தையும் தெளித்தனர். ஆனால் கவுதமி தற்போது கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடிகை கவுதமி கூறுகையில், ‘‘நான் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பத்தில் அமெரிக்கா சென்று திரும்பினேன். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.என்னை யாரும் சோதனைக்கும் உட்படுத்தவில்லை. இப்போது நான் கிழக்கு கடற்கரை சாலையில் வசிக்கிறேன். என் வீட்டின் முன்பு எந்த நோட்டீசும் ஒட்டவில்லை. அப்படியே இனிமேல் ஒட்டினாலும் கவலையில்லை’’ என்றார்.

முன்னதாக கவுதமியின் பாஸ்போட்டில் இருந்த முகவரியை வைத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டியதால், பெரும் சர்ச்சை ஆனது. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் அதனை அகற்றினார்கள். கொரோனா வைரசில் இருந்து எங்களை காக்க தனிமைப்படுத்தி கொண்டோம் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து, அந்த நோட்டீசை அகற்றிய சென்னை மாநகராட்சி, இந்த விவகாரத்தில் தவறு நடந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இது பற்றிய கப்சா செய்திக் குறிப்பு: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து சமீபத்தில், வெளிநாடு திரும்பியவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களின் வீட்டில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல் வீட்டிலும் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

அந்த நோட்டீசில், கொரோனாவில் இருந்து எங்களையும் சென்னையையும் காக்க நாங்கள் வீட்டிற்குள் தனிமைபடுத்தி கொண்டுள்ளோம் என்ற வாசகத்துடன் 10.3.2020 முதல் 06.04.2020 வரை தனிமைப்படுத்தி கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முகவரியில் கமல் பெயர் மற்றும் வீட்டு முகவரி இடம்பெற்றிருந்தது. ஆனால், எத்தனை பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கமலுக்கு தெரியாமலேயே அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக மக்கள் நீதி மையம் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நோட்டீஸ் அகற்றப்பட்டது. இது தொடர்பாக விளக்கமளித்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கமல் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்ற வந்ததால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பாஸ்போர்ட் முகவரியை கொண்டு கமல்ஹாசனின் பழைய முகவரியில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

கமல் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் கொரோனா நோட்டீஸ் அகற்றப்பட்டது. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறுகையில், கமல் வீட்டில் கவுதமி இன்னும் லிவிங் டுகெதரில் இருப்பதாக நினைத்து எங்கள் அதிகாரிகளால் சிறிய தவறு நடந்துவிட்டது. இனிமேல், இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல் வெளியிட்ட கப்சா அறிக்கை:

“உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது வீட்டின் வெளியே ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை வைத்து நான் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக கவுதமியுடன் நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், நான் தற்போது பூஜாகுமார் உடன் வாழ்ந்து வருகிறேன்.

கரோனாவுடன் வாழ்ந்தாலும், பெண் துணையின்றி என்னால் வாழ முடியாது. வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் என்னுடன் நடிக்கும் சில நடிகைகளுடன் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுள்ளேன். இது கவுதமிக்கும் பூஜாவுக்கும் தெரியும். திரைத்துறையினர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அந்த கப்சா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பகிர்