நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகள் அணைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளில் தமிழக மின்சார வாரியம் தயாராகியுள்ளது. மோடி ஏப்ரல் 9 தேர்வு செய்தது ஏன்? கொரோனா தொடர்பாக மன் கீ பாத் உரை அல்லாமல் நேற்று மூன்றாவது முறையாக நாட்டு மக்கள் முன்பு பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். ஏப்ரல் 5ம் தேதி மக்கள் இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த அழைப்பு இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இணையத்தில் பலரும் சீரியஸாகவும், கிண்டலாகவும் டிவிட் செய்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் உடனே மெழுகுவர்த்திகள், தீ பெட்டிகள், சிறிய சிறிய ஒளி விளக்குகள், விளக்குகளில் பயன்படுத்தும் எண்ணெய்களை அத்தியாவசிய பொருட்களின் லிஸ்டில் கொண்டு வர வேண்டும். எல்லா கடைகளிலும் இந்த பொருட்களை ஸ்டாக் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும், ரேஷன் கடைகளிலும் இது கிடைக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பலர் மிக சீரியஸாக டிவிட் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் வடஇந்திய நெட்டிசன்கள் இப்போதே தீபாவளிக்கு தயார் ஆகிவிட்டார்கள். இதற்காக இப்போதே #Diwali டேக் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வட இந்தியாவில் தீபாவளி அன்று வீட்டில் இருக்கும் விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு, சிறிய சிறிய அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம். அதேபோல் செய்ய வடஇந்தியாவில் மக்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது மக்கள் இன்னொரு தீபாவளிக்கு தயார் ஆகி வருகிறார்கள்.
இந்தியா முழுக்க மருத்துவமனைகளில் மக்கள் கொரோனாவிற்கு எதிராக போராடுகிறார்கள். மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகிறார்கள். பெண் நர்ஸ்கள் வீட்டிற்கு செல்லாமலே போராடி வருகிறார்கள். அவர்களுக்காக நாம் கண்டிப்பாக விளக்குகளை அனைத்து, நமது ஒற்றுமையை காட்ட வேண்டும் என்று பலர் இதற்கு சப்போர்ட் செய்ய தொடங்கி உள்ளனர். ஊரடங்கு காரணமாக மக்கள் சோர்ந்து போய் இருக்கிறார்கள். இதனால் பலர் வீடுகளில் பதற்றத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற முடிவுகள் அமைதியை தரும். மக்கள் கவனத்தை இது திசை திருப்பும். பிரதமர் மோடியின் திட்டம் சரியானதுதான் என்று குறிப்பிட்டு தயார் ஆகி வருகிறார்கள்.
மக்கள் டென்ஷனாக இருக்கும் இந்த கொரோனா காலத்தில் சிலர் இந்த ஐடியாவை வைத்து ஜாலியாக கலாய்க்கவும் தொடங்கி உள்ளனர்.. அவனவன் கொரானாவுக்கு மருந்து கண்டுப்பிடிக்கிறான். நாம போன வாரம் கை தட்டி கொரானாவுக்கு காது இல்லன்னு கண்டுப்பிடிச்சோம். இப்ப லைட் ஆப் பண்ணி கண்ணு இருக்கான்னு கண்டுப்பிடிக்க போறோம். வர வாரங்களில் கொரானாவுக்கு மூக்கும் வாயும் இருக்கான்னு கண்டுப்பிடிக்க போறோம். பலர் மிகவும் ஜாலியாக இந்த ஐடியாவை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இதை ஜாலியாக நாம் கடைபிடிக்க வேண்டும். எல்லோரும் விளக்கை அணைக்க வேண்டும். உலகிற்கு இது உதாரணமாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் எப்போதும் போல இந்த திட்டத்தை இணையத்தில் பலர் செமையாக கலாய்த்தும் வருகிறார்கள். இந்த திட்டங்களை எல்லாம் பார்த்து.. கொரோனா வைரஸ் சிரிச்சே செத்துரும்.. மாஸ்டர் ஸ்டிரோக்! என்று பலர் கூற தொடங்கி உள்ளனர்.
ஊரடங்கினால் மனநலம் பாதிக்காமல் இருக்க ஓய்வினால் கிடைக்கும் நேரத்தை உருப்படியாக செலவிட மனதை ஆரோக்கியமாக வைக்க பிராத்தித்து கொள்கிறேன். பத்து நாளைக்கே இப்படின்னா பதினாலாம் தேத்திக்கப்புறம் மருத்துவத்துறை பங்களிப்பு மேலும் தேவைப்படும். கை தட்டி, லைட் அடிச்சி, பாட்டுப்பாடி, நடனம் ஆடி, விசில் அடிச்சி, சட்டையை பிச்சி, ட்ரவுசரை கழட்டி, தேச ஒற்றுமையை இந்த உலகத்துக்கும் கொரோனாவுக்கும் காட்டுவோம்.. என்று பலர் கிண்டலடிக்கின்றனர்.
“கொரோனாவின் பெயரால் குடிமக்களை குட்டிக்கரணம் போடச்சொல்லி பிரதமர் மோடி ‘குரங்காட்டம்’ நடத்துகிறார் என்றும் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொண்டால் தான் உண்டு என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கறாராக தெரிவித்துள்ளார். “நாடு முழுவதுமான முழு அடைப்பு பத்து நாட்களை எட்டியுள்ள நிலையில், நாட்டின் பிரதமர் ஏதோ அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்றதும் முக்கியமான செய்திகள் அதில் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருந்தனர். ஆனால், ஏப்ரல் 5, ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு ‘டார்ச் லைட்டை’ அடியுங்கள் என்று பிரதமர் அறிவிப்பு செய்துள்ளார்.
இந்த அறிவிப்பால் கரோனா தொற்றிலிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமா? 21 நாள் அடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பிரதமர்தான் பதிலளிக்க வேண்டும். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது எப்படி மக்களை முட்டாளாக்கும் அறிவிப்புகளை வெளியிட்டாரோ அதைப் போன்ற அறிவிப்புகளை மீண்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்.
இந்த நிலையில், பிரதமர் இந்த முறையாவது உருப்படியாக ஏதேனும் அறிவிப்புகளைச் செய்வார் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால் மின்சாரத்துறையிடம் ரகசிய உத்தரவு பிறப்பித்து, விளக்கு ஏற்றி மின் விளக்குகளை அணைக்காதவர்களை தேசத்துரோகிகள் என்று அடையாளம் கண்டு, பாகிஸ்தானுக்கு அனுப்ப மோடி திட்டம் தீட்டி உள்ளதாக, கப்சா செய்திகள் தெரிவிக்கின்றன.