கொரோனா உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது ‘ஹைட்ராக்சிகுளோரோகுய்ன்’ மருந்துக்கு உலகம் முழுக்க சண்டை நடக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்பது குய்ன் வகை மருந்துகளில் ஒன்றாகும். இது மலேரியாவிற்கு எதிரான மருந்து ஆகும். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் உட்கொண்டால் தலைவலி, உடல் வலி, அதீத மன அழுத்தம், அயர்ச்சி, மூச்சு அடைப்பு, உடல்களில் வீக்கம், தோல் உரிதல், மூக்கில் இருந்து ரத்தம் வருதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். உலகில் இந்தியாவில்தான் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மலேரியாவும், கொரோனாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி செயல்படுகிறது. இதனால் கொரோனாவிற்கு எதிராக தற்போது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கழகம் இந்த மருந்தை பரிந்துரை செய்துள்ளது. ஆனால் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து கொரோனாவை குணப்படுத்தாது. கொரோனா வைரஸ், மனித உடம்பில் இருக்கும் வைரஸ் போலவே வேடம் அணிந்து நமது எதிர்ப்பு சக்தி அளிக்கும் செல்களை குழப்பும். இதனால்தான் இந்த கொரோனாவை கொல்வது கடினமாக இருக்கிறது. மலேரியாவும் இதேபோல்தான் செயல்படும். ஒருவருக்கு மலேரியா ஏற்பட்டாலும் அவரின் எதிர்ப்பு சக்தி இப்படித்தான் அழிக்கப்படும்.

அதனால்தான் இரண்டுக்கும் ஒரே மருந்தினை பரிந்துரை செய்கிறார்கள். இந்த மருந்து, கொரோனாவின் வேடமணியும் செயல் திறனை குறைக்கும். இதனால் இந்தியாவில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தின் ஏற்றுமதிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் பாராசிட்டமால் உள்ளிட்ட 26 வகை மருந்துகளுக்கும் இந்தியா ஏற்றுமதி செய்ய தடை விதித்து இருந்தது. ஆனால் இந்தியாவின் இந்த ஏற்றுமதி தடைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை எங்களுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்தியா எங்களுக்கும் இந்த ஏற்றுமதி தடையை விதிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்தியா எங்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்யவில்லை என்றால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டி இருக்கும், என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் ஒரு பக்கம் இப்படி அழுத்தம் கொடுத்து இருக்கும் நிலையில் ஐரோப்பாவில் உள்ள நாடுகளும் இந்தியாவிடம் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை கேட்க தொடங்கி உள்ளது. பிரேசில் ஏற்கனவே இந்தியாவிடம் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை கேட்டுள்ளது. அதேபோல் ஸ்பெயின் இதற்காக இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. இத்தாலியும் இந்தியாவிடம் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கேட்க உள்ளது. இதனால் இந்தியாவிற்கு உலக நாடுகளிடம் இருந்து கடுமையான அழுத்தம் அளிக்கப்பட்டு வந்தது. இந்தியா இதனால் தங்களுடைய ஏற்றுமதி தடை முடிவில் இருந்து பின் வாங்க வாய்ப்புள்ளது என்று கூறினார்கள். தற்போது அதேபோல் இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை அண்டை நாடுகளுக்கும், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வோம் என்று இந்தியா கூறியுள்ளது. மனித நேயத்தை அடிப்படையாக் கொண்டு இந்த முடிவை எடுக்கிறோம். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மற்றும் பாராசிட்டமால் ஆகிய மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதுதான் திட்டம் இதனால் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் உற்பத்தியை இந்தியா அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். மொத்தம் உள்நாட்டு தேவை அதோடு கூடுதலாக 25% கையிருப்பை வைத்துக்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு மேல் இந்தியாவிடம் உள்ள ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் விற்பனை செய்யப்படும். முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும்

அடுத்த வேளை உணவுக்கே எண்ணெய் இல்லாத மக்கள் எப்படி விளக்கேற்றுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தியில் எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9மணிக்கு 9 நிமிடங்கள் செல்போனில் டார்ச் வெளிச்சத்தைக் காட்டுங்கள் என்று கூறி இருந்தார். இந்த உரையை கேட்ட சங்கிகளும் நாட்டு மக்களும் ஒரு படி மேலே போய் கொரனாசுரனை வதை செய்தது போல் விளக்கு ஏற்றியதுடன் நில்லாமல், பட்டாசு வெடித்து கொண்டாடினர். சில இடங்களில் தீ விபத்துக்களும் நேர்ந்தன. சிலர் விளக்குப்பிடி மோடி என மீம்ஸ் போட்டு கலாய்த்தனர். டிரம்ப் மருந்து கேட்டு மிரட்டியதும் தொடை நடுங்கிய மோடி, மருந்து ஏற்றுமதி தடையை நீக்கியது, இந்திய மக்கள் செத்தாலும் பரவாயில்லை என கொள்ளி வைக்கத் தயார் நிலையில் மோடி அரசு உள்ளது என்பதைக் காட்டுகிறது என கப்சா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பகிர்