ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்த சேர்வைக்காரன் ஊரணியைச் சேர்ந்தவர் கருணாகரன். கொத்தனார் வேலை பார்க்கும் இவர், மதுபோதைக்கு அடிமையானவர். இவருக்கு மாலை ஆனால் போதும் சரக்கு சாப்பிடாவிட்டால் கையும் ஓடாது, காலும் ஓடாது. தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. வெளியேவும் குவார்ட்டர் ரூபாய் 600-க்கு விற்கபடுவதால், தாமே ‘சரக்கு’ தயாரிப்பது என முடிவு செய்தார். இதற்காக வீட்டின் பின்புறத்தில், குக்கரில் சாராயம் காய்ச்சி உள்ளார். தகவலறிந்து வந்த போலீஸார் பாத்திரத்தோடு அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர்கள் பாணியில் கொத்தனாரை ‘கவனித்து’ அனுப்பி உள்ளனர்.

முதுகுளத்தூர் அருகே வீட்டில் சமையல் குக்கரில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக தாய் மற்றும் 2 மகன்கள் மீது போலீசார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தில் வீட்டிலேயே கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. தகவலறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேஸ் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனார். அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி விமலா (50) மற்றும் அவரது மகன்கள் கிளிண்டன் என்ற பால்ராஜ், நேசக்குமார் ஆகியோர் வீட்டில் கள்ளச் சாரயம் காய்ச்சுவதற்காக நூதனமுறையில் குக்கரில் சாராய ஊறல் தயாரித்து வைத்துள்ளனர். போலீசார் வருவதை கண்ட 3 பேரும் தப்பி ஓடினர். வீட்டில் சோதனை செய்த போது 2 லிட்டர் சாராயம் மற்றும் குக்கரில் வைத்திருந்த 25 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர் இது குறித்து இளஞ்செம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

மேலும் பிறப்பன்வலைசையில் சாராயம் காய்ச்சியதாக எழுந்த புகாரின் பேரில் ஒருவரிடம் போலீஸார் விசாரிக்கின்றனர். அதே போல் முதுகுளத்தூர் அருகே வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தின் அருகே பனைமரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு சார்பு -ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சென்று சோதனையிட்ட போது மண் பானைகளில் பதுக்கி வைத்து கள் விற்றது தெரிந்தது.இதன் பேரில், முதுகுளத்தூரைச் சேர்ந்த பாண்டி (54) என்பவரை போலீசார் கைது செய்து 20 லிட்டர் ‘கள்’ளை பறிமுதல் செய்தனார். தமிழகம் முழுவதும் இவ்வாறு பிடிபட்ட கள்ள சாராய கேக்களுக்கு பயன்படுத்தப் பட்ட குக்கர்களில் டிடிவி தினகரன் உருவ ஸ்டிக்கர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ‘கப்ஸா’ பேட்டி அளித்த டிடிவி தினகரன் கூறியதாவது:
ஊரடங்கால் டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில், சாராயம் காய்ச்சுவது எப்படி என்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதும், அவற்றை குடிமகன்கள் தேடிபார்ப்பதும்தான் இப்போதைக்கு டிரண்டிங் ஆகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க பிறப்பிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு, மீண்டும் நீட்டிக்கப்பட்டு விட்டது. தொழில்துறைகள், நிறுவனங்கள் மூடப்பட்டதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். பலர் வருமானம் இழந்து வாடகை கொடுக்கவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் முடியாமல் அல்லல் படுகின்றனர். ஆனால், இதை விட பெரிய கவலை குடிமகன்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நாள் முழுக்க போதையில் மிதக்கும் இவர்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டதால் தவியாய் தவிக்கின்றனர். பிளாக்கில் வாங்கினால் ஒரு குவார்ட்டருக்கு 700 முதல் 800 அழ வேண்டியுள்ளது. அதுவும் ஒரிஜினல் சரக்கா என்பது குடிக்கும் வரை தெரிவதில்லை. ஆல்கஹால் சானிடைசரை மதுவில் கலந்து சிலர் பிளாக்கில் விற்கின்றனர். சிலர், இந்த சானிடைசரை குடித்து உயிரிழந்துள்ளனர். மதுக்கடைகள் இல்லை. பிளாக்கில் வாங்க காசும் இல்லை என்பதால் குடிமகன்கள் இருதலை கொள்ளி எறும்பு போல் செய்வதறியாமல் தவியாய் தவிக்கின்றனர். இவர்களது வயிற்றில் பால் (மது) வார்த்ததுபோல் யூடியூப்களில் சாராயம் காய்ச்சும் வீடியோக்கள் உலா வர தொடங்கி விட்டன. யூடியூபில் சாராயம் காய்ச்சுவது எப்படி எனவும், ஒயின் செய்வது எப்படி என்றும் தேடுவதுதான் இப்போது படு டிரெண்டிங் ஆகிவிட்டது.

அந்த வீடியோக்களில், பழங்களை நொதிக்க வைத்து குக்கர் மூலம் சாராயம் காய்ச்சி வடிப்பது எப்படி என்று விலா வாரியாக செய்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. இதுபோல், அரிசி ஒயின், வோட்கா செய்வது குறித்தும் வீடியோக்கள் பல யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு குக்கர் பேருதவியாக இருப்பதைக் கண்டு குடிமகன்கள் படு குஷியாகி விட்டனர். பலர் நான் கொடுத்த குக்கரில் வீட்டிலேயே முயற்சி செய்து பார்ப்பதாக, வீடியோவுக்கு கீழே கமென்ட்டில் எனக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சிலர் குக்கரில் செய்த சாராய வீடியோ பதிவேற்றம் கண்டு ‘டிடிவி தெய்வமே… இவ்வளவு நாளா எங்க இருந்த என் தெய்வமே’ என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

இதனால், சில வீடுகளில் அடுக்களையில் உலை கொதிக்கிறதோ இல்லையோ… குக்கரில் சாராயம் கொதிக்க தொடங்கி விட்டது. ஆனாலும், ஆனால், குக்கரும் கையுமாக இப்படி காய்ச்ச கிளம்பினால்… போலீஸ் வந்து அள்ளிட்டு போயிரும் அம்புட்டுதான். நான் ஆர்கே நகரில் கொடுத்த குக்கர்கள் இப்போது தமிழகமெங்கும் குடி மகன்கள் தாகம் தீர்க்கும் அட்சயபாத்திரமாக மாறி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. குக்கரில் சரக்கு தயாரிப்பவர்களை கைது செய்யும் போலீசாரை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறினார்

பகிர்