அதிமுகவின் சின்னம் இரட்டை இலை, ஜெயாவுக்கு பிடித்த ஆடை நிறம் பச்சை நிறம். இவ்விரண்டையும் மனதில் வைத்து கொரோனா பாதிக்காத பச்சை மண்டலங்களில் பச்சை பெயர்பலகைகளை கொண்ட டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான போர் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் தலைநகரான நெரிசல் மிகுந்த சென்னையில் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் நேற்று முன்தினம் 138 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவே அதிக பாதிப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இதையும் மிஞ்சும் வகையில் நேற்று 176 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,082 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே தேசிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்தநிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த ஆலோசனையில், தேசிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று குறைந்த கிராமப்புற பகுதிகளில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்து ஆலோசன நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது டாஸ்மாக் வருமானத்தை பேருக்கும் வழிவகைகள் ஆராயப்படுகின்றன. ஊரடங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ள சில முக்கிய பணிகள் குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழகத்தில் எந்தெந்த பணிகளுக்கு மாநில அரசு அனுமதி அளிக்கும் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு குறித்த மத்திய அரசின் வழிகாட்டுதலில் முக்கியமான முடிவை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மத்தி அரசு கொரோனா பரவல் குறித்த ஹாட்ஸ்பாட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதில் சிவப்பு மண்டல லிஸ்டில் உள்ள சென்னை உள்பட 130 மாவட்டங்கள் உள்ளதால், இந்த மாவட்டங்கள் மே 3ம் தேதிக்கு பிறகும் முடங்கும் நிலை உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியா முழுவதும் 733 மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரித்துள்ளது. இதில் இந்தியாவில் அனைத்து பெருநகர நகரங்களிலும் மே 3ம் தேதி லாக்டவுன் முடிவடைந்த பின்னரும் ‘எந்த நடவடிக்கையும் இல்லாத’ மண்டலங்களின் லிஸ்டில் மத்திய அரசு வைத்துள்ளது.
சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளை ‘எந்த நடவடிக்கையும் இல்லாத’ மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது எந்த செயல்பாடுகளுக்கும் அனுமதி இருக்காது என்று தெரிகிறது. 130 சிவப்பு மண்டல மாவட்டங்களும் முடக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் தோற்று இல்லாத தமிழக பச்சை மண்டலங்களில் தொற்றை புதிதாக தோற்றுவிக்கும் விதமாக பச்சை போர்டு டாஸ்மாக் மற்றும் எச்சில் துப்பும் பீடா கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி சிறப்பு செய்துள்ளது.