உயிர் சேதம், பொருட் சேதம் என மேற்கு வங்கத்தையே புரட்டி போட்ட ஆம்பன் புயலால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. இங்கு ரூ 1. லட்சம் கோடிக்கு சேதமடைந்துள்ளதாக மாநில அரசு கூறுகிறது. அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான புயல் சூப்பர் புயலாக மாறியது. இந்த ஆம்பன் புயல் நேற்று மேற்கு வங்கத்தின் டிக்காவுக்கும் வங்கதேசத்தின் ஹதியா தீவுக்கும் இடையே கரையை கடந்தது.
அப்போது காற்று மணிக்கு 133 கி.மீ. வேகத்தில் பலமாக வீசியது. இதனால் அங்கு மரங்களும் மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்தன. அதிக வேக காற்றால் அங்கு உள்ள டெல்டா பகுதிகள் மற்றும் கொல்கத்தாவின் நகர்ப்புற பகுதிகளிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மாநிலத்தில் ஒரு லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படுத்திவிட்டு சென்றது. சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியது.
இந்த பாதிப்புகளை சரி செய்ய இன்னும் சிறிது நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது. கொல்கத்தா விமான நிலையங்களிலும் தண்ணீர் தேங்கியது. இந்த புயலால் 10- முதல் 12 பேர் வரை இறந்துவிட்டனர். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஸ்தம்பித்துள்ள நிலையில் இந்த புயல் மேற்கு வங்கத்தையே புரட்டி போட்டுவிட்டது. மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உம்பன் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து அம்மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
மேற்குவங்கத்தில் புயல் கரையை கடந்த பகுதி சுந்தர வனக்காடுகள் அதிகம் கொண்ட இடமாகும். உம்பன் புயல் கரையை கடந்தபோது கொல்கத்தாவில் கடும் சூறாவளி காற்று வீசியது. மேற்குவங்க கடலோராத்தில் 5 மீ்ட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புயல் கரையை கடந்தபகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு மாநில முதல்வர்களுடன் பேசினார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில் ‘‘புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒடிசா மற்றும் மேற்குவங்க முதல்வர்களிடம் தொலைபேசியில் பேசினேன். இருமாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை செய்யும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அம்மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்’’ எனக் கூறினார். மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உம்பன் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து அம்மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது புயலால் ஏற்பட்டுள்ள சேத மதிப்பு குறித்து தகவல் திரட்டுமாறு கேட்டுக் கொண்டார். அடுத்த சில நாட்களில் இயல்பு நிலைமை திரும்ப நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறினார். எல்லாவற்றுக்கும் கருத்து தெரிவிக்கும் அதிமுக ஜெயக்குமார் ஆம்பல் புயல் குறித்து அளித்த கப்ஸா பேட்டியில் ” கொரோனா நிதி மாநில நிதி பகிர்வாக தமிழகத்திற்கு ரூ1928 கோடி நிதியை அறிவித்தார் நிர்மலா சீதாராமன். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில், 688 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49.82 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ரயில் ஓடலாம் பஸ் ஓடலாம் விமானம் ஓடலாம், ஆனால் அன்றாடங்காய்ச்சிகளான ஆட்டோ டாக்சி ஓட்ட அனுமதி இல்லை. மிகவும் மாணவருத்தத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் அடித்த வீசிய புயல் இந்த தமிழ்நாட்டில் வீசி இருந்தால் கொரோனா நிதியுடன் ‘மீட்டருக்கு மேல்’ ஒரு நூறு கோடி ருபாய் டிப்ஸாக வாங்கி பேரவையில் மிக்ஸர் காராபூந்தி செலவுக்கு பயன்படுத்தி இருப்போம்” என்றார்.