மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லத்தில்தான் வாழ்ந்து வந்தார். அவரது மறைவுக்கு பின் அந்த வீடு பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஏற்கனவே வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது. தற்போது 3 ஆண்டு கழித்து இது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார். தமிழகத்தில் இதற்காக அறக்கட்டளை உருவாக்கப்படும். தமிழக முதல்வர் இதன் தலைவராக இருப்பார். துணை முதல்வர், தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இந்த வீடு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது, என்று அரசு கூறியுள்ளது. ஒரு காலத்தில் பொதுமக்கள் போக முடியாத இடத்திற்கு இனி மக்கள் இலகுவாக சென்று வருவார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது.

“கொரோனா ஊரடங்கு காரணமாக ஜெ வாரிசுகள் தீபா தீபக் வீட்டுக்குள் முடங்கி கிடைப்பதாலும் கொரோனா காலத்துக்கு பிறகு சின்னம்மா ரிலீசானால் வேதா இல்லத்திற்கு உரிமை கொண்டாடி சமையல் கட்டில் பத்து பாத்திரங்களுடன் டேரா போட்டு விட்டால் ஆபத்தாகி விடுமே, அதனால் தான் அவசர சட்டம் பிறப்பித்தோம். போயஸ் கார்டன் பொது வழியாகி ரஜினிக்கும் ஷாக் கொடுத்த மாதிரி ஆகும்..வேதா நிலையத்தையும், அங்குள்ள பொருட்கள், நகைகள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பராமரிக்க இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையம் மற்றும் அங்குள்ள பொருட்களை அரசுடைமையாக்க வழிவகை செய்யும் வகையில் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அந்த பொருட்கள் அரசின் வசம் இருக்கும்  நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தபின்னர், நினைவு இல்லத்தில் அவை வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதா நிலையம் இல்லம் நினைவிடமாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.” என்று கப்ஸா பேட்டியில் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

பகிர்