அடிக்கடி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் நிலையில் தற்போது ஒரு இட்லி குறித்த கருத்து ட்ரெண்டாகி வருகிறது. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் அரசியல் பேச்சுகள் சர்ச்சையாகும்.

அதே சமயம் அதை விட அதிக ட்ரெண்டிங் ஆவது என்றால் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை அவர் சந்தித்தது குறித்து சொல்லும் செய்திகள்தான். இதற்கு முன்னர் ஆமைக்கறி சாப்பிட்டது, அரிசி கப்பலை சுட்டது என அவர் பேசிய பல சம்பவங்கள் சர்ச்சையான நிலையில், தற்போது கறி இட்லி கருத்து வைரலாகி வருகிறது. சந்தித்தது ஐந்து நிமிடம் என்றாலும் ஐம்பது வருடங்களுக்கு கதையை தயார் செய்து வைத்துள்ளார் சீமான்.

ஒரு யூட்யூப் சேனலுக்கு சீமான் அளித்த பேட்டியில் பிரபாகரனை சந்திக்க சென்றபோது அவர் இட்லி அளித்ததாகவும் அதை பிளந்து பார்த்தபோது உள்ளே கறி இருந்ததாகவும் கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவரை விமர்சிக்கும் பலர் ”சீமான் பிரபாகரனை சந்தித்தது குறித்து எப்போது பேசினாலும் உணவு குறித்தே பேசுகின்றார்” எனவும், அவர் சொன்ன இட்லி குறித்தும் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர், சீமான் சொன்னது உண்மை எனவும், இலங்கையில் இட்லிக்குள் கறி மசாலா வைத்து சமைக்கும் முறை உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளனர். “கீமா இட்லி” என்றழைக்கப்படும் இந்த இட்லியை செய்வது குறித்த வீடியோவையும் பரவலாக ஷேர் செய்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்கள் பலவற்றில் கீமா இட்லி குறித்த பேச்சாகவே உள்ளது.

இதுபோக பிரபாகரன் குளிக்கும் பொது எட்டி பார்த்த சீமான் மிக எளியவரான பிரபாகரன் அண்ணன் கரைந்து போன பழைய சோப்பை தூக்கி போடாமல் புதிய சோப்பில் ஒட்டித்தான் குளிப்பார் என்றும் கப்ஸா பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுபோல் பிரபாகரன் அண்ணனின் பல அந்தரங்க தகவல்களை விரைவில் வெளியிடப் போவதாகவும் கொரோனாவை விட அவை ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்ணன் சீமானுக்கு பிரபாகரன் அ.க74 துப்பாக்கியால் சுடும் பயிற்சியை அளித்துள்ளார். பயிற்சிக்காக ஒரு ஆஸ்திரேலிய அரிசிக் கப்பலையே தாரை வார்த்துள்ளார். அப்படி ஒரு கப்பலையே துல்லியமாக தாக்கும் ஆற்றல் கைவரப்பெற்ற சீமான், சுற்றிலும் குண்டுகளைப் போட்டு மக்களைக் கொன்று கொண்டிருந்த சிங்களனிடம் சமர் புரிந்து அவன் தலையை தரையில் உருட்டியிருக்க வேண்டும்; ஆனால், அண்ணன் சப்பளாங்கால் போட்டமர்ந்து இட்டிலியை உருட்டி விளையாடியது ஏன் என்பது மட்டும் புரியவில்லை.

இறுதி போர்கட்டத்திலே புலிகள் சாம்பார், கூட்டு, பொறியல் செஞ்சாங்க, கறி வறுத்து தந்தாங்க, ஆமை கறி திண்ணாங்க. நான் திங்கிறதை ஒருத்தங்க நோட்ஸ் எடுத்து அண்ணனுக்கு சொன்னாங்க…போராட்ட களத்தை கேலிகூத்தாக்கும் சீமான். புலிகளை கேவலபடுத்த இவன் ஒருத்தன் போதும்..என்றார் கப்ஸா நிருபர்

பகிர்