ஜெயலலிதாவின் 2-ம் நிலை வாரிசுகளாக அவரது அண்ணன் பிள்ளைகளான தீபக்கையும், தீபாவையும் உயர்நீதிமன்றம் அங்கீகரித்து இன்று தீர்ப்பு வழங்கியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டுமென பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கில் இதனை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி கருத்து அறிவதற்காக குட்டி அம்மா தீபாவை உங்கள்நியூஸ் சார்பாக தொடர்புகொண்டோம்.

அப்போது அளித்த கப்ஸா பேட்டியில் அவர் கூறியதாவது; ” எங்கள் அத்தையின் (ஜெயலலிதாவை) வாரிசுகளாக என்னையும், எனது சகோதரர் தீபக்கையும் உயர்நீதிமன்றம் அங்கீகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இன்று நடைபெற்ற இந்த நிகழ்வை ஒரு நல்ல விஷயமாக நான் பார்க்கிறேன். இவ்வளவு நாட்களாக விடைத் தெரியாமல் பலர் எழுப்பிய கேள்விகளுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது”.

”நீதிமன்றத் தீர்ப்பின் நகல் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அது கிடைத்த பின்னர் அதில் என்னென்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை படித்தால் தான் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்க முடியும்.” ஜெயலலிதாவின் இல்லத்தில் ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்த யோசனை பற்றி கேட்டபோது-

” அது தொடர்பாக அடுத்ததாக என்ன செய்வது என்பது பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. அதேபோல், அத்தை பெயரில் உள்ள சொத்துக்களை பொதுசேவைக்காக அறக்கட்டளை அமைப்பது பற்றியும் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போது தானே தீர்ப்பு வந்துள்ளது, அதற்குள் நீங்கள் கேட்டால் எப்படி சொல்லமுடியும், பொறுத்திருந்து பாருங்கள்” (wait and see) எனக் கூறினார் .

ஜெயலலிதா சொத்து விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் இந்த தீர்ப்பின் மூலம் அரசின் அவசரச் சட்டம் செல்லாது எனவும் குறிப்பிட்டார். இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இன்னும் பல ஆண்டுகளுக்கு மற்ற வழக்குகளுக்கு கூட உதாரணமாக திகழக்கூடும் எனக் கூறிய அவர், ஆளுநரிடம் ஜெயலலிதா இல்லம் தொடர்பாக கடிதம் மூலம் முறையிடுவேன் எனவும் கூறியுள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பேட்டியளித்த அவர் அதன் பின்னர் சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கும், தீபக்குக்கும் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது, சென்னை உயர் நீதிமன்றம். ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கும், தீபக்குக்கும் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒன்றை விற்று, அத்தொகையை வங்கியில் டிபாசிட் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பாதுகாப்பு செலவினங்களுக்கு பயன்படுத்த உத்தரவிட்டனர்.

இதற்கிடையே பாதுகாப்பு கொடுக்க வேண்டியவர்கள் பெயரில் கணவர் மாதவன் பெயர் விடுபட்டு போயுள்ளது ஆனால் டிரைவர் ராஜா பெயர் உள்ளது. இதை கேள்விப்பட்டு மாதவன் தூக்கில் தொங்க போனதாகவும் கடைசி சென்றதில் தீபா காப்பாற்றியதாகவும் தெரிகிறது. தனது பால்கனிக்கு புதிதாக பெயிண்ட் அடித்து ராஜாவுக்கும் ஆள் அனுப்பி தகவல் தெரிவித்துள்ள குட்டி அம்மா விரைவில் தனது அரசியல் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்க உள்ளதால் மீம் கிரியேட்டர்கள் குஷி மூடில் உள்ளனர்.

பகிர்