சீனா எல்லை பிரச்னை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அவர் நல்ல ‘மூடில்’ (mood) இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா-சீனா நடுவேயான எல்லை பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருப்பதாக டொனால்டு டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்ஸவா பதிலளித்தார். அவர் கூறுகையில், சீன நாட்டுடன் தொடர்பில் இருக்கிறோம். இந்த பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வகுத்து வருகிறோம் என்றார். ஆனால் டொனால்டு டிரம்ப் இந்த விஷயத்தை விடுவதாக இல்லை. வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அவர், இது பற்றி கூறியதை பாருங்கள்: நான் இந்திய பிரதமரை மிகவும் விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த ஜென்டில்மேன்.

இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகள் இடையே மிகப் பெரிய மோதல் இருக்கிறது. ஒவ்வொரு நாடும் தலா 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்டது. இரண்டு நாடுகளுமே, பலமான ராணுவத்தை கொண்டுள்ளன. ஆனால் எல்லை விவகாரத்தில் இந்தியாவும் சரி, சீனாவும் சரி அதிருப்தியில் இருக்கின்றன. நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். தற்போது நிலவும் எல்லை விவகாரம் தொடர்பாக ஆலோசித்தேன். ஆனால் மோடி இந்த விவகாரத்தில் நல்ல மூடில் இல்லை. இப்போதும் கூறுகிறேன்.

அமெரிக்காவின் உதவி கேட்கப்பட்டால், இருநாடுகளிடையே மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். டொனால்டு டிரம்ப் மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருப்பதாக வெளியிட்ட அறிவிப்பு பற்றி சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் அந்த நாட்டு அரசு நடத்தக்கூடிய முன்னணி பத்திரிகையான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் அமெரிக்காவை நம்பக் கூடாது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளுக்குமே அமெரிக்க அதிபரின் உதவி தேவைப்படாது.

சமீபத்தில் எழுந்துள்ள இந்த பிரச்சனையை சீனா மற்றும் இந்தியா இருநாடுகளும் தீர்த்துக்கொள்ளும். அமெரிக்கா பற்றி இரு நாடுகளுமே விழிப்போடு இருக்கவேண்டும். அமெரிக்காவைப் பொறுத்த அளவில் பிராந்திய அமைதி சீர்குலைவுகளின் ஒவ்வொரு தருணத்தையும் பயன்படுத்திக் கொள்வதில் நிபுணத்துவம் பெற்ற நாடு என்று தெரிவித்துள்ளது.

பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர், இந்தியாவும் சீனாவும் தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வதற்கு ஏற்ற தகவல்தொடர்பு வழிமுறைகள் உள்ளன என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

மோடி நல்ல மூடில் இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளது எந்த அர்த்தத்தில் என்பது புரியவில்லை. சீனா மீது கோபமாக இருக்கிறாரா, அல்லது மத்தியஸ்தம் தேவையில்லை என்று முகத்தில் அடித்தது போல சொல்லிவிட்டாரா என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தவில்லை.

இந்த நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள கப்சா அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்பவர்கள் எனது அடியாட்கள் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை பெற்றவர்களாக இருப்பார்கள். சுழற்சி முறையில், சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து பயிற்சி செய்ய அனுமதித்தால் நோய் தொற்று பரவும் சூழல் ஏற்படாது. அதேபோல், கட்சி கூட்டங்களில் அடிதடி தொழில் செய்பவர்கள் வருவாயின்றி வறுமையில் தவிப்பதால் ‘ஜிம்’களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் திறக்க அனுமதித்து அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும், பதினெட்டு பட்டிக்கும் பஞ்சயத்து சொன்ன ஆல மர செட் இன்னும் பொள்ளச்சியில் பிரிக்கப்படாமல் உள்ளது. இந்தியாவுக்கும் சீனவுக்கும் இருக்கும் பிணக்கை அங்கு வைத்து பைசல் செய்ய  ட்ரம்புக்கு வாட்சப்பில் கோரிக்கை விடுத்துள்ளேன்.” என்றார்.

பகிர்