ஜாதி துவேஷத்தை தூண்டும் ‘காட்மேன்’ தொடர்: எஸ்.வி.சேகர் போலீசில் புகார் செய்துள்ளார். சர்ச்சைக்குரிய ‘காட்மென்’ வெப்சீரிஸ் தொடர் ஜாதி, மத பிரிவுகளுக்கு இடையே பகையை தூண்டுவதாகவும், அதில் நடித்த நடிகர்கள், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சினிமா இயக்குனர் எஸ்.வி.சேகர் சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரில் அவர் கூறியுள்ளதாவது: நேற்று ஜீ தமிழ் டிவி-யின் ஜீ5என்கிற ஓடிடி தலத்தில் வரப்போகும் காட்மேன் என்ற இணைய தொடர் ஒன்றின் டிரெய்லரை பார்த்து பேரதிர்ச்சிக்குள்ளானேன். அது வரும் ஜூன் 12 முதல் ஒளிபரப்பாகும் என தெரிகிறது. அதில் பிராமண சமூகத்தை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருக்கிறது.

சாமியார் வேடமிட்ட ஒருவர் பிராமணர்களை அவமதிக்கும் வகையில் வசனம் பேசி நடித்திருக்கிறார். இது ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும் உள்ளது. இதனால் குறிப்பிட்ட சமுதாயம் தாக்கப்படக்கூடிய சூழலும், பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையிலும் உள்ளது.

இது மிகவும் கண்டிக்கதக்கது. இந்த டிரெய்லரில் பிராமணர்களைப் பற்றியும் , இந்து மதத்தைப்பற்றியும், மத நம்பிக்கைகள் பற்றியும் தவறான, கொச்சையான வசனங்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. எந்த ஒரு மதத்தையோ அல்லது சமூகத்தையோ குறிப்பிட்டு அசிங்கப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால் அது தண்டனைக்குரிய குற்றம், என்பது தெரிந்ததே. கடந்த சில காலங்களாக ஒரு குறிப்பிட்ட மதத்தை, ஜாதியை கொச்சைப்படுத்தி பேசும் வசனங்களை ஊடகங்களில் வைப்பது வாடிக்கையாகிவிட்டது.

இது மேலும் தொடர்ந்தால் தவறான முன்னுதாரணமாகி தமிழகத்தை வன்முறைக்கு அழைத்து செல்லும். இந்த தொடரில் பணியாற்றியர் மூலமாக கேட்ட தகவல் படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலாவைப் பற்றியும் ஒரு கிறிஸ்துவ போலீஸ் அதிகாரியிடம் சொல்லி செய்யப்பட்ட கைது போன்ற வன்மமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அறிகிறோம்.

இதில் நடித்த ஜெயப்ரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ ரகுபதி, இணை இயக்குனர் ராஜா முகமது, நிர்வாக தயாரிப்பாளர் சுகுமாரன் மற்றும் ஜீ5 சிஇஓ தருண் கதியால் ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 153 (A), 504, 505 and தொழில்நுட்ப பிரிவு சட்டம் 2000 ன் 67 ஆகிய பிரிவுகளின் கீழ கைது செய்து, காட்மென் தொடரை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்த டிரெய்லரையும் தடை செய்ய வேண்டும். இந்த தொடர் ஜூன் 12 வெளியாவதாக விளம்பரப்படுத்தியுள்ளார்கள்.

இந்த தொடர் வெளியானால் அது நாட்டில் பல்வேறு கலவரங்கள் ஏற்பட காரணமாக அமையும். அதில் ஒருவர் “என்னை சுத்தி இருக்க பிராமணர்கள் எல்லாம் அயோக்கியனுங்க” என வசனம் பேசுகிறார். இதுபோன்ற தொடரை எடுத்த இயக்குனர், தயாரிப்பாளரை கைது செய்ய வேண்டும்” என கூறியுள்ளார். மீடியா பெண்கள் அந்த தொழில் செய்து முன்னுக்கு வரலாம் என்று ஏற்கனவே கூறிவிட்டேன். அது நாங்கு சுவருக்குள் நடந்தா தப்பில்ல, இப்படி வெப் சீரீசாக போனில் பார்த்தால் தப்பு. இந்த படத்தை ஒரு பிராமண டைரக்டர் எடுத்திருந்தால் பாராட்டுவோம், குடை பிடிப்போம், ஆனால் மாற்று மத, சாதியினர் எடுத்தால் எதிர்ப்போம், இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

பகிர்