தமிழகத்தில் இருக்கும் பல மாவட்டங்கள் மற்றும் ஊர்களின் பெயர் தமிழ் மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் அதன் பெயர்களைக் குறிப்பிடும் போது சரியான தமிழ் உச்சரிப்பிற்கு நேர்மாறாக உள்ளது.

இதனையடுத்து தமிழில் அதன் ஊர்ப் பெயர்களை உச்சரிப்பது போலவே ஆங்கிலத்திலும் அதன் பெயர்கள் மாற்றப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஊர்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களை இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பெயர்ப் பலகைகளிலும் மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஊர்கள் பெயர் தமிழில் எழுதுவது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், நான்லாம் இன்னும் மெட்ராஸ், ஊட்டி, பம்பாய்னு தான் சொல்லிக்கிட்டுருக்கேன்…

இதுல palavakkam இல்லை, paalavaakkam, coimbatore மாத்தி koyampuththur ஆனா erode மட்டும் erode… இப்படிக் குழப்பி என்ன லாபம்? டெர்மினஸ், டிரெயின் ஸ்டேஷன் எல்லாத்துலயும் பேர் மாத்த காண்ட்ராக்ட்- எடுக்கறவங்களுக்கும் குடுக்கறவங்களுக்கும் லாபம் என்றும், ஒரு வேளை, நியூமராலஜியா இருக்குமோ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கான நடைமுறை சிக்கல் காரணத்தையும் அரசு தெளிவாக தெரிவித்துள்ளது.. இதற்கு பல தரப்பில் இருந்து வரவேற்புகள் குவிந்தாலும், ட்விட்டர்வாசிகள் சிலர் இந்த பெயர் மாற்றத்தில் தவறு உள்ளதாகவும், அவைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வழக்கம்போல நக்கல் கலந்து அதே சமயம் மிக முக்கியமான கேள்வியையும் கஸ்தூரி முன் வைத்துள்ளதை இங்கு கவனிக்க வேண்டி உள்ளது. கஸ்தூரியின் இந்த ட்வீட்டுக்கு பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. அதில் ஒருவர் “எங்க பாட்டி கூட அப்படி தான் சொல்லிட்டு இருக்காங்க என்று ஸ்மைலிகளுடன் ஒரு கமெண்ட் போட்டார்.

விடுவாரா நம்ம கஸ்தூரி, “சிரிப்பா தம்பி. நீயும் ஒரு நாள் கிழவனாகத்தான் போறே… வயசு எல்லாருக்கும் ஆகும். அதுக்கேத்த அறிவு வளரலேன்னா உன்னை போல கமெண்ட் அடிச்சுகிட்டு அதுக்கு நீயே சிரிச்சுக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.

ஆளும் வளரனும் அறிவும் வளரனும்…வாழ்த்துக்கள்” என்று திருப்பி பதில் கமெண்ட் போட்டு அந்நபரை ஆஃப் செய்துவிட்டார். இப்போது கஸ்தூரியின் ட்விட்டர்தான் தெறித்து விழும் கருத்துக்களால் படுசூடாகி வருகிறது!

‘சேலம் என்பதை salem என்று எழுதுகிறார்கள். அது “சலேம்” என்று அர்த்தம் வராதா? இனிமே நியூஸ் பேப்பர்ல கூட Maanbumigu Mudhalvar Thiru Edappaadi Kay Pazhanichchaami Avargal என்றுதான் எழுதுவார்கள் போலிருக்கிறது. இப்படித்தான் பாருங்கள், ஊரடங்குக்கு முன்பு செம தமாஷ் ஆகி விட்டது’. என்ற கப்சா நிருபர் மேலும் தொடர்கிறார்:

“பம்பாய்க்கு ரயிலில் செல்வதற்காக ஒருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். எந்த பிளாட்பாரத்தில் ரயில் நிற்கிறது என்று தெரியாததால், அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம் என்று நின்று கொண்டு இருந்தார். அறிவிப்பும் வந்தது.”

“வணக்கம். புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், காஞ்சிபுரத்தில் உதித்த அறிஞர் அண்ணாவின் இதயக்கனி, கொடுத்துக் கொடுத்தே சிவந்த கரமும் செந்நிற மேனியும் உடைய மண்ணூர் கோபால மேனன் ராமச்சந்திரன் சென்னை மத்திய ரயில்வே நிலையத்தில் இருந்து மாவீரன் சிவாஜியின் மண்ணான மகாராட்டிர மாநிலத்தின் தலைநகரமாம் பம்பாய் நகரத்துக்கு தடதடவென்று விரைவாக சென்று அடையக்கூடிய மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது பனிரெண்டாம் நம்பர் நடைமேடையில் நின்று கொண்டு இருக்கிறது”.

“இந்த அறிவிப்பை கேட்டு விட்டு வேகமா பனிரெண்டாம் பிளாட்பாரத்துக்கு ஓடிய நண்பருக்கு பெரும் அதிர்ச்சி. ஏனென்றால் அறிவிப்பு முடிவதற்குள்ளாகவே அந்த ரயில் பம்பாய் போய் சேர்ந்து விட்டதாம்”. என்று கப்சா நிருபர் நக்கலடித்தார்..

பகிர்