இரவு நேரத்தில் பறந்து வந்தது ரம்யா கிருஷ்ணன் கார்.. அந்த காரை நிறுத்தி டிக்கியை திறந்து பார்த்த போலீசார் அதிர்ந்து போய்விட்டனர். பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களிம் பட்டைய கிளப்பியிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இதுவரை 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். இவர் அனைத்து மொழிகளிலும் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக, அவரை தூக்கி சாப்பிடும் படியான மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படையப்பா படத்தில் அவரது நடிப்பு பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. ஹீரோயின், வில்லி, அம்மன், கிளாமர் என கிடைக்கும் கேரக்டர்களில் எல்லாம் பிச்சு உதறி வருகிறார்.

கமல்ஹாசனுடன் இவர் நடித்த பஞ்சதந்திரம் படம் பெரிதும் பேசப்பட்டது. எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் இவரது நடிப்பு கிரீடத்தில் மேலும் ஒரு ரத்தினமாக பதிந்தது. ராஜமாத சிவகாமி தேவியாக மிரள விட்டார். அதுவே என் கட்டளை.. என் கட்டளையே சாசனம் என அவர் கம்பீரமாக பேசும் டயலாக்கும் பெரும் வரவேற்பை பெற்றது.

பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமாதா என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்த புகாரில் சிக்கி தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். காரில் ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி அபிநய கிருஷ்ணன் மற்றும் ஓட்டுநர் இருந்துள்ளனர்.

தடையை மீறி காரில் மதுவை கடத்தி வந்த புகாரில் ரம்யா கிருஷ்ணனின் கார் ஓட்டுநர் கானாத்தூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் செல்வக்குமாரை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி அபிநய கிருஷ்ணன் ஆகியோர் ஜாமினில் அழைத்து வந்தனர். பழரசம் தீர்ந்துவிட்டதா? ரம்யா கிருஷ்ணன் காரில் இருந்து சரக்கு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அறிந்தவர்கள், மகிழ்மதியில் பழ ரசம் தீர்ந்துவிட்டதா..ராஜமாதா சரக்கை கடத்த தொடங்கிவிட்டார் என கிண்டலாக கேட்க தொடங்கி விட்டனர்.

ஊரடங்கு போட்டதில் இருந்தே சென்னையில் டாஸ்மாக்குகள் மூடப்பட்டுள்ளது.. மற்ற மாவட்டங்களில் திறக்க அனுமதி தந்த நிலையில், சென்னையில் மட்டும் கெடுபிடிகள் உள்ளன. ஆனால் சென்னையில் மது விற்பனை தடை செய்யப்பட்டுவிட்டதால், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை சிலர் கடத்தி வருகின்றனர்.

அவர்களை தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி நம் போலீசார் கைது செய்து வருகிறார்கள். இரவு பகலாக இதே வேலையாக வாகன சோதனை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்படித்தான் ஈசிஆர் ரோட்டில் கானத்துார் போலீசார் முட்டுக்காடு அருகில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர்.. அப்போதுதான் அந்த கார் ரம்யா கிருஷ்ணனுடையது என்பது தெரியவந்தது. சோதனை நடத்தியதில், 97 டின்களில் அடைக்கப்பட்ட பீர் மற்றும் 8 பிராந்தி பாட்டில்களும் இருந்தன.

இதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் செல்வகுமாரையும் கைது செய்தனர்.. ரம்யா கிருஷ்ணன் காரில் இவ்வளவு மதுபாட்டில்கள் எப்படி வந்தது? பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி டிரைவர் கடத்தி வந்துள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரம்யா கிருஷ்ணன் காரில் பாட்டில் பாட்டிலாக மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது தயாராக வைத்திருந்த ஷூட்டிங் மேக்கப் கிட்டிலிருந்த கிளிசரினை கண்களில் தோய்த்துக் கொண்ட ரம்யா கிருஷ்ணன், “ஹேண்ட் சானிடைசர் தயாரித்து ‘குடி’மக்களுக்கு இலவசமாக கொடுக்க கொண்டுவந்த ஆல்கஹாலை பிடிக்கிறீங்களே” என்று கண்ணீர்விட்டு அழுததாக, கப்சா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பகிர்