லடாக் சண்டையில் எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள் என்பதை சீன ராணுவம் வெளியிடாமல் இன்னும் தாமதம் செய்து வருவதற்கு என்ன காரணம் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பின் மூன்று முக்கியமான காரணங்கள் இருக்கிறதாம். இந்தியா – சீனா இடையிலான லடாக் பிரச்சனை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள். லடாக்கில் எப்போது வேண்டுமானாலும் பெரிய அளவில் சண்டை நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

சீனாவும் அங்கு படைகளை குவித்து வருகிறார்கள். இரண்டு நாட்கள் முன் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு எதிராக சண்டை நடந்தது. அங்கு இரண்டு நாட்கள் முன் நடந்த சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த சண்டையில் சீனாவின் தரப்பில் எத்தனை பேர் பலியானார்கள் என்று விவரம் வெளியாகவில்லை. சீனாவின் வீரர்கள் 43 பேர் இதில் பலியானதாக முதலில் கூறப்பட்டது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் மட்டும் இந்த செய்தியை வெளியிட்டு இருந்தது. ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை. சீனாவின் செய்தி நிறுவனம் எதுவும் சீனாவில் எத்தனை பேர் பலியானார்கள் என்பதை உறுதியாக கூறவில்லை. லடாக் சண்டை குறித்து சீனா தொடர்ச்சியாக கருத்துக்களை கூறி வருகிறது. லடாக்கில் இந்தியா அத்துமீறுவதாக சீனா தொடர்ந்து கூறி வருகிறது. அதோடு கல்வான் பகுதி எங்களுக்கு சொந்தம். இந்தியா அங்கு அத்துமீறுகிறது. நாங்கள் இந்தியாவை இனியும் எங்கே அனுமதிக்க முடியாது.

இந்தியா எங்களுடன் பேச வேண்டும் என்றும் கூட சீனா கூறிவிட்டது. சீனா இத்தனை விஷயங்களை வெளிப்படையாக சொல்லும் இந்த நிலையில், இன்னும் சீன வீரர்களின் மரணம் குறித்தும் மட்டும் மௌனம் காக்கிறது. லடாக் சண்டையில் எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள் என்பதை சீன ராணுவம் வெளியிடாமல் இன்னும் தாமதம் செய்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பின் மூன்று முக்கியமான காரணங்கள் இருக்கிறதாம். அதன்படி அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் இறப்பு குறித்த எண்ணிக்கையை இப்போது வெளியிட கூடாது என்று அதிபர் ஷி ஜிங்பிங் உறுதியாக கூறிவிட்டாராம்.

தாக்குதலில் இறந்த எல்லோரின் பின் விவரமும் வேண்டும். அனைவரையும் குறித்து தெரிந்து கொண்ட பின்பே அவர்களின் பட்டியலை வெளியிடுவோம். அதுவரை இறப்பு குறித்து வாய் திறக்கவே கூடாது, யாரும் அறிவிப்பு வெளியிட கூடாது, நான் தான் அறிவிப்பு வெளியிடுவேன் என்று உறுதியாக ஜிங்பிங் கூறிவிட்டாராம். அடுத்தபடியாக 1962ல் நடந்த இந்தியா சீனா போரில் சீனாவின் வீரர்கள் 2000 பேர் பலியானார்கள். அது சீனாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இருந்து சீனா பலி எண்ணிக்கையை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

கொதிப்பு அடங்கிய பின்பே சீனா பலி எண்ணிக்கைகளை வெளியிடும் என்று கூறுகிறார்கள். மக்கள் இடையே பதற்றம் ஏற்பட கூடாது என்பதால் சீனா இப்படி அமைதி காத்து வருகிறது. கடைசியாக இன்று அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பாம்பியோ மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை தலைவர் யாங் இடையே மீட்டிங் நடக்கிறது. அதேபோல் நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதனால் இரண்டும் நடக்கும் நேரத்தில் சீனாவின் பலி எண்ணிக்கை குறித்து வெளியிட கூடாது .

இதெல்லாம் முடிந்த பின் சீனாவின் பலி எண்ணிக்கை குறித்து அந்நாட்டு அரசு வெளியிடலாம் என்று கூறுகிறார்கள். மத்திய அரசின் கப்சா செய்திப் பிரிவின் தகவல்படி போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட ‘ஸ்கோர்-போர்டு’ ஒன்று பார்லிமெண்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இறப்பு ஸ்கோரில் நாட்டமில்லாத மோடி கரோனாவுக்கு பிஎம்-கேர் நிதி வசூலித்தது போல், சீனப்போரில் இறந்தவர்களின் அனுதாப அலையை வைத்து கல்லா கட்ட ‘மிலிட்டரி-கேர்லஸ்-ஃபன்டு’ என்று தனது சுவிஸ் பேங்க் அகவுண்ட் நம்பரை வெளியிடுவார் என்று தெரிகிறது.

பகிர்