நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், ரஜினிகாந்த் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

நேரில் சென்று விசாரித்தபோது, கபாலி காலா போன்ற ‘சாதிவெறி’ படங்களை பார்த்தது முதல் அந்த சிறுவனுக்கு மனநிலை பாதிப்பு இருப்பதாகவும், தனது தந்தையின் செல்போனை எடுத்து போன் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரது பெற்றோருக்கு அறிவுரைகள் கூறி, மறுபடியும் இது போல நடந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து திரும்பினர்.

இந்த நிலையில், அந்த சிறுவனின் தந்தை ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் மிகவும் உருக்கமாக கையெடுத்துக் கும்பிட்டபடி பேசுகிறார். அவர் கூறுகையில் “பையன் கபாலி காலா படங்களால் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டவர். எனவே அவனை மன்னித்துவிடுங்கள். ரஜினிகாந்த சார்.. நானும் உங்களது ரசிகர் தான்.”

“நீங்கள் நடித்த எந்த திரைப்படம் வெளியானாலும் முதலில் ஓடிச்சென்று தியேட்டரில் பார்க்க கூடிய ஒரு ரசிகர். ‘அண்ணாத்த’ படம் வெளியாகும்போதும் முதல் டிக்கெட் எடுக்கப் போவது நான்தான். உங்கள் ‘சாதிவெறி’ படங்களால் பையன் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து செல்போனை எடுத்து உங்களுக்கு போனில் தொந்தரவு கொடுத்து விட்டார். உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மன்னித்துவிடுங்கள்.” இவ்வாறு அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த மாணவனின் பெற்றோரை நேரில் சந்தித்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய அந்த குடும்பத்திற்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிப் பொருட்களை வழங்கி விட்டு அறிவுரை கூறி விட்டு வந்துள்ளனர். அப்போது அச்சிறுவன் மீண்டும் அண்ணாத்த படம் ‘சாதிவெறி’ பேசினால் நான் வெடிகுண்டு குறித்து போனில் பேசுவேன் என்று கத்தியிருக்கிறான்.

மன்றத்தினர் கூறுகையில் “மன்னிச்சிட்டோம் அப்பா. மகனை நல்ல மருத்துவ மனையில் சேர்த்து சரி பண்ணுங்க…. சுஷாந்த் மாதிரி விட்டுடாதீங்க! பணம் குடுத்து இப்படி நடிக்க சொன்னாலும், இந்த மாதிரி விபரீத வெளையாட்டெல்லாம் வேணாம்…குருமூர்த்தி ஹெச் ராஜா எஸ் வீ சேகர் போன்ற அதீத மனநிலை பாதிக்கப்பட்டவர்களை நண்பர்களாக வைத்து இருக்கும் ரஜினி அவர்கள் தன் ரசிகர் மகனை மன்னிக்க மாட்டாரா? வேறு வழி இல்லாமல் காவி பாவிகளை அருகே வைத்துள்ளார். தலைவர் தமிழக மக்கள் நலனுக்காகவே காவிகளின் பிளானில் சிக்காமல் அரசியலில் டிமிக்கி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.” என்று அறிவுரை கூறிவிட்டு வந்தோம் என்றனர்.

பகிர்