முன்னாள் அமைச்சரும் அதிமுக இலக்கிய அணி செயலாளருமான பா. வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் பா. வளர்மதி அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்ட அதிமுக, திமுக எம்.எல்.ஏ.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் இலக்கிய அணி செயலாளருமான பா. வளர்மதிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பா. வளர்மதி சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக உயிருக்கு போராடி வந்த திமுகவின் ஜெ.அன்பழகனின் சிகிச்சைக்கு ஓடோடி வந்து உதவினார் பாஜகவின் தமிழிசை சவுந்தராஜன்..
சிகிச்சை அளிப்பது தொடர்பாக லண்டன் மருத்துவர்களோடு ரேலா ஆஸ்பத்திரி மருத்துவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், தேவையான மருந்துகளை தெலுங்கானாவில் இருந்து அனுப்பி வைத்தார் டாக்டர் தமிழிசை! ஆபத்து நேரத்தில் உயிரை காப்பாற்ற தமிழிசை சவுந்தராஜன் மருந்துகளை அனுப்பி வைத்தது அனைவரும் அறிந்த நிகழ்வு. அந்த மருந்துகள் எல்லாம் அன்பழகனுக்கு முழுவதுமாக பலன் தந்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது. கடைசியில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார். அவர், ‘தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று ட்விட்டரில் பதிவிட்டார்.
ஜெ.அன்பழகனுக்கு அனுப்பியது காகித பொட்டலத்தில் கபசுர குடிநீர் அனுப்ப தமிழிசை முயற்சித்ததாகவும், உயிருக்கு பயந்த பா.வளர்மதி வேண்டாம் என்று கூறியுள்ளார், தமிழிசை வற்புறுத்தவே அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் வரும் வசனம் போல் ‘நோ மீன்ஸ் நோ’ என்று கதறியதாக அதிமுக கப்சா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.