லடாக்கில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் ராணுவ வீரர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்தியா, சீனா எல்லையில் இருநாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று லடாக் வந்தார்.

அவருடன் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி எம்.எம் நரவணே ஆகியோர் உடன் வந்திருந்தனர். லே விமான நிலையத்தில் இருந்து ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாகனத்தில் சடாக்னா ராணுவ முகாம் பகுதிக்கு சென்றடைந்தனர். அங்கு ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகளை இயக்கி பார்த்தார்.

அங்கு ராஜ்நாத் சிங் முன்னிலையில் பாராசூட் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். போர்க்களத்திற்கு பாராசூட் மூலம் வீரர்களை அனுப்பி வைப்பது பற்றி ஒத்திகை செய்து காண்பித்தனர். எல்லை பகுதியில் போர் ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வது பற்றி ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.அப்போது வீரர்கள் முன் பேசிய ராஜ்நாத் சிங், ‘எல்லைப் பிரச்னையை தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையை தீர்த்துவிட முடியும் என்று என்னால் உறுதியாக கூறமுடியாது.

ஆனால், ஒரு அடி நிலத்தைக் கூட விட்டுத் தரமாட்டோம் என்று உறுதியாகக் கூறுகிறது. உலகுக்கே அமைதியை எடுத்துக்காட்டிய நாடு. உலகமே ஒரே குடும்பம் எனும் நம்பிக்கையைக் கொண்டது இந்தியா. நாம் எந்த நாட்டையும் தாக்கியது கிடையாது. எந்த நாட்டின் நிலத்தையும் பறித்துக் கொண்டு உரிமைக் கொண்டாடியது கிடையாது’ என்று தெரிவித்தார்.

எதிரி நாட்டு முகாமை சுற்றி வளைத்து தாக்குவது, பீரங்கிகளில் சென்று குண்டு வீசி தாக்குவது பற்றிய ஒத்திகையும் நடத்தப்பட்டது. எல்லையில் பாதுகாப்பு படைகளின் தயார் நிலை பற்றி ஆய்வு செய்யும் ராஜ்நாத் சிங் நாளை ஸ்ரீநகர் செல்ல உள்ளார். மத்திய அரசின் கப்சா செய்திக் குறிப்பில் விஜயகாந்த்-அர்ஜூன் படங்களில் தீவிரவாதிகளை வெற்றிகரமாக தோற்கடிப்பதால் அவர்கள் பயன்படுத்திய டம்மி துப்பாக்கிகளில் உப்புமா கிண்டும் ரவையை அடைத்து தாக்குதல் நடத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்