பசுவின் பாலில் தங்கம் இருப்பதாக கடந்தாண்டு கூறிய அதே பா.ஜ., தலைவர் இப்போது பசு கோமியத்தை குடிக்க அறிவுறுத்தி உள்ளார். கடந்த2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டுள்ளது. இதற்கான மருந்துகள் கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தியாவிலும் இக்கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்தவும் தனி மனிதரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் பல்வேறு மருத்துவ முறைகள் கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மே.வங்க. பா.ஜ.,தலைவர் திலீப் கோஷ் பசுமின் கோமியத்தை குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து மே.வங்க மாநிலத்தில் துர்காபூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறி இருப்பதாவது:மக்கள் கொரோனா வைரசால் அவதிப்படுகிறார்கள் . ஒரு கழுதைக்கு பசுவின் மதிப்பு புரியாது . இது இந்தியா, பகவான் கிருஷ்ணரின் நிலம், இங்கே மாடுகள் கடவுள், நாங்கள் வணங்குகிறோம். ஆரோக்கியமாக இருக்க எங்களுக்கு பசு சிறுநீர் இருக்கும் “ஆயுர்வேத மருந்து எடுத்துக் கொள்ளுங்கள், கவலைப்பட வேண்டாம்” மது உட்கொள்பவர்கள், ஒரு பசுவின் மதிப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள் என கூறினார்.

திலீப்கோஷ் மாடுகள் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை அல்ல. நவம்பர் 2019 ல் கோஷ், பசுவின் பாலில் தங்கம் உள்ளது எனகூறி இருந்தது சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலான விமர்சனங்களைத் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பகிர்