பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாக உள்ளதால், அவர் எதிர்காலம் குறித்து ஜோதிடர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலில் மிகப் பெரிய திருப்பமாக சசிகலாவின் விடுதலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏனெனில் ஜெயலலிதா ஆட்சிக்கு முன்னும், பின்னும் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தது சசிகலாவின் வட்டாரம், அவருக்கு அதிமுகவில் இருக்கும் அனைத்து புள்ளிகளைப் பற்றியும் தெரியும்.

இதனால் அவர்களை எல்லாம் எப்படி மடக்கலாம் என்ற விஷயத்தை சசிகலா ஏற்கனவே யோசித்து வைத்துவிட்டாராம்.அதுமட்டுமின்றி இந்த கொரோனா நேரத்தில் வெளியில் வந்தால், எந்த ஒரு பரபரப்போ, அரசியல் புள்ளிகளையோ சந்திக்க முடியாது என்பதால், இப்போது சசிகலா தன்னுடைய விடுதலையை விரும்பவில்லை, தன்னுடைய விடுதலை ஒரு செய்தியாக இருக்க கூடாது, அரசியலில் ஒரு மாற்றமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். அந்தளவிற்கு பல திட்டங்களை சசிகலா சிறையில் யோசித்து வைத்திருகிறாராம்.

இந்நிலையில், சசிகலாவின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதில் ஆர்வம் காட்டும் அவரது ஆதரவாளர்கள், தமிழகத்தில் பிரபல ஜோதிடரிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதோடு நிற்காமல், வட மாநில ஜோதிடர்களையும் அணுகியுள்ளனர். சமீபத்தில், சசிகலா ஆதரவாளர் ஒருவர், கங்கை கரையில் உள்ள காசிக்கும், அலகாபாதிற்கும் சென்று வந்துள்ளார். காசியில் பிரபல ஜோதிடர் ஒருவரைப் பார்த்து, சசிகலாவின் ஜாதகத்தைக் காட்டி, எதிர்காலம் குறித்து கேட்டிருக்கிறார். அந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி, காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டுள்ளதாம்.

இதே போல, அலகாபாதிலும், திரிவேணி சங்கமத்திலும் பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதாம். சசிகலா எப்போது முதல்வர் ஆவார், அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்றெல்லாம், ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சிறைத் தண்டனை முடிந்த நாளிலிருந்து, ஆறு ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சின்னம்மா சிறையில் இருந்து விடுதலையாகி விளக்குமாறு குப்பை முறம் சகிதமாக சென்னை வேதா இல்லத்திற்கு நடைபயணமாக வந்தாலும் வீட்டி வேலை தான் செய்ய வேண்டும், முதல்வராகும் கனவெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட வேண்டும் என ஜோதிடர் கடிந்து கொண்டதாக தெரிகிறது.

பகிர்