உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தை நெருங்க இருக்கின்றது. கேரளாவில் சில இடங்களில் கரோனா, சமூக பரவல் கட்டத்திற்கு சென்றுவிட்டதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் 4000க்கும் மேலான கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால் சமூக பரவல் நிலையை எட்டி உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “அவர் என்ன மருத்துவரா? அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார். தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ஒரு பெண்ணிடம் ‘மெயின் ரோட்டுக்கு வா நேரில் பேசிக் கொள்ளலாம்’ என்று பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவின் ஆண் குரல், தன்னால் கர்ப்பமான ஒரு பெண் குறித்து பேசியது. அந்த ஆண் குரலுக்குச் சொந்தக்காரர் ஜெயக்குமார் தான் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அடுத்த நாளே குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

அதே நாளில், செய்தியாளர்கள் முன்னிலையில் பேட்டியளித்த தினகரன் தரப்பு ஆதரவாளர் வெற்றிவேல், ‘அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது ஜெயக்குமார்தான். அவருக்கு இப்போது தம்பி பாப்பா பிறந்துள்ளது’ என்று கூறி பகீர் கிளப்பினார். சிந்து கொடுத்த ஒரு பேட்டியில், “அமைச்சர் தொடர்பான ஆதாரங்கள் நிறைய இருக்கு. அமைச்சரைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தால் அவர் எங்களை அசிங்கப்படுத்த நினைக்கிறார். என் விவகாரத்தை திசைத் திருப்ப இப்படிப் பொய்யான புகார்களை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதோடு இந்த விளையாட்டை நிறுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆதாரங்களை வெளியிடுவேன்” என்று மிரட்டினார். பிறகு அடங்கிப் போனார். இப்போது ஜெயக்குமார் ஸ்டாலினிடம் அதே பாணியில் தொலைபேசியில் “நான் மெயின் ரோட்டுக்கு வந்து நின்றால் சிந்து போன்ற பெண்களுக்கு கொரோனா அல்லது குழந்தை தொற்று பரவினால் தான் சமூகத் தொற்று” என்று கடிந்து கொண்டதாக கப்சா நிருபர் தெரிவிக்கிறார்.

பகிர்