இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தற்போது சென்னையில் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 4-வது ஞாயிற்று கிழமையான இன்று எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. 6-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை 31ந்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

ஊரடங்கு தளர்வு, நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது. கொரோனா பரவலை தடுக்க மேலும் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா? என்பது இந்த ஆலோசனைக்கு பிறகு தெரியவரும் என்றும் மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவை ஊரடங்கால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் தூத்துக்க்குடி துப்பாக்கி சூடு பாணியில் உயிரடங்கு உத்தரவு பிறப்பித்து வெளியில் வருபவர்களை சுட்டுத்தள்ள உத்தரவு பிறப்புக்கப் படுமா என வெளியான தமிழக கப்சா செய்திக்குறிப்பில் சந்தேம் எழுப்பப்பட்டுள்ளது.

பகிர்