தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை விஜயலட்சுமி, சென்னை அடையாறில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் நடித்த ஃப்ரண்டஸ், ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர நடிகை விஜயலட்சுமி.

இவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக தொடர்ந்து புகார் கூறி வந்தார். மேலும், சீமான் தன்னுடன் இருந்ததாகக் கூறி சில அந்தரங்க வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

இந்த நிலையில். நடிகை விஜயலட்சுமி, சென்னை திருவான்மியூரில் உள்ள தமது இல்லத்தில் இன்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து அவர் சென்னை அடையாறில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

முன்னதாக நடிகை விஜயலட்சுமி இன்று வெளியிட்டிருந்த கப்சா வீடியோவில், “தான் மிகுந்த மனஅழுத்தத்தில் இருப்பதால் தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும், பிரபாகரன் சீமானுக்கு கொடுத்து போல் ருசியான ஆமைக்கறி பிரியாணி கேட்டேன் இந்த் சீமான் எனக்கு வாங்கித்தர மாட்டேங்கிறார்.. அதனால் சாகிறேன், இதுவே தான் பேசும் கடைசி வீடியோ” என்றும் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

பகிர்