தமிழகத்தில் புதிதாக 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதோடு தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 3494 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தமிழக அரசு மாநிலத்தின் தினசரி தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை தினமும் வெளியிட்டு வருகிறது.

சென்னையில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை ஒரு நிலையான அளவில் பதிவாகி வரும் நிலையில், சென்னைக்கு வெளியே செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர், ராணிபேட்டை, காஞ்சிபுரம் தூத்துக்குடி, கன்னியாகுமரி , மதுரை ஆகிய பல மாவட்டங்களிலும் கனிசமான அளவில் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி வருவது சுகாதராத்துறையினருக்கு கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

தமிழகத்தில் இன்று 64,129 மாதிரிகள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில்,இதுவரை மொத்தம் 23,51,463 மாதிரிகள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 85 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் மொத்த எண்ணிக்கை 3,494 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5,471 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த என்ணிக்கை, 1,56,526 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 53,703 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் இலவசமாக கொடுக்கப்படும் முக கவசங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2 முக கவசங்கள் வழங்கப்படும் என்றும் இதற்கான டோக்கன்கள் ஆகஸ்ட் 1முதல் 3ஆம் தேதி வரை கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

இந்த முக கவசங்கள் ஆகஸ்ட் 5 முதல் கிடைக்கும் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். சென்னை கோடம்பாக்கம் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

ரேசன் கடைகளில் இலவச பொருட்களை வாங்குவதற்காக ஆகஸ்ட் 1 முதல் டோக்கன் கொடுக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 5 முதல் இலவச பொருட்களை வாங்கலாம் என்றும் தெரிவித்தார் இலவச பொருட்களுடன் முக கவசமும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

ஒரு இலவச மாஸ்க் விலை ரூ. 6.45 – அமைச்சர் ஆர்.பி உதயகுமார். ரேசனில் இலவசமாக கொடுக்கும் மாஸ்க் ரூ.6.45 க்கு கொள்முதல் – அமைச்சர் ஆர்.பி உதயகுமார். ரேசன்கடைகளில் ஆகஸ்ட் 5 முதல் இலவச மாஸ்க் விநியோகம் செய்யப்படும்.

அசுரவேகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைப் பற்றியோ மரணங்கள் பற்றியோ மக்கள் கேள்வி கேட்கவோ போராட்டங்களிலோ இறங்காமல் இருக்கவே அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் விதமாக முகக்கவசம் வழங்கப்படுகிறது என கப்சா செய்திக் குறிப்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கிறார்.

பகிர்