தன்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிவிட்டார்கள் என்று நடிகை விஜயலட்சுமி குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. மேலும் ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன், மிசைய முறுக்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சி செய்வதற்கு முன்பு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுயிடம், எழும்பூர் மாஜிஸ்திரேட் அண்மையில் விசாரணை நடத்தினார். அதன்அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து தன்னை வெளியேற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியதற்கான காரணம் புரியவில்லை. மூச்சுவிட சிரமமாக இருந்த நிலையிலும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிவிட்டார்கள். சீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. எனக்கு பின்னால் அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை.
நான் நாடகம் எதுவும் போடவில்லை. காயத்ரி ரகுராம் என் அனுமதியே இல்லாமல் என்னை டிஸ்சார்ஜ் செய்ய வைத்துள்ளார். அன்று எனக்கு ஆதரவாக இருந்த காயத்ரி ராகுராம் தற்போது என்னுடன் இல்லை என்றார். செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு விஜயலட்சுமி புறப்பட்டபோது பாஜகவின் மகளிரணி மாநில செயலாளர் ஜெயலட்சுமி அவரை அணுகி, தான் சட்ட ஆலோசனை மையம் வைத்திருப்பதாக கூறி உதவி செய்ய முன்வந்தார்.
ஆனால் பாஜகவினர் யாரும் எனக்கு உதவி செய்ய வேண்டாம் என விஜயலட்சுமி மறுப்பு தெரிவித்துவிட்டு அங்கிருந்து பூரண நலத்துடன் வீடு திரும்பினார். கப்சா நிருபர் விசாரித்ததில், “ஆமைக்கறி, இட்லி கறி கதைகள் போல் பிரபாகரன் புதிய சோப்பில் பழைய சோப்பை ஒட்டிக் குளித்த கதை, தனக்கு கொடுத்த ‘துருப்பிடித்த துப்பாக்கி’ கதைகளை மருத்துவ நிர்வாகத்திடம் டைரக்டருக்கே உரிய தொனியில் திகிலுடன் கூறி மிரட்டியதால், மருத்துவ நிர்வாகம் சும்மனாச்சுக்கும் ஒரு கொரோனா டெஸ்ட் செய்துவிட்டு” விஜயலட்சுமியை பூரண நலத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டதாக தெரிவித்தார்.