தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கத்தை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் முக்கிய அறிவிப்பாக தமிழகத்தில் கடைகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.

எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது. உணவகங்களில் முன்பு உணவகங்களில் முன்பு இருந்தது (31.7.2020 வரை) போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் சென்னையில் தான் முதலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது தற்போது பிற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையிலும் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர்: அரசின் விரைவான நடவடிக்கைகளால் சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது. இதுவரை 14 லட்சம் பேர் காய்ச்சல் முகாம்களால் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முகக்கவசம் வழங்கப்படுகிறது. அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான்.இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன என கூறினார்.

மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அறிவித்து உள்ளார். ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு

ரெயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும், இ-பாஸ் நடைமுறையும் தொடரும் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி. ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும்.

பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு வேலை இல்லை வருமானம் இல்லை மின்சாரக் கட்டணம் குறைக்கலாம். ரேஷன் கடைகளில் நல்ல உணவு தானியங்கள் விலை குறைத்து வழங்கலாம், ஆனால் அதை செய்ய மாட்டோம்.

கிறிஸ்தவன் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்கு செல்வான், இஸ்லாமியன் இறைச்சிக் கடை நடத்துவான், இருமதத்தினரையும் அடக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதுதான் மோடியின் இந்துத்வா கொள்கை. வளர்ந்த தமிழகத்தை பொருளாதாரத்தில் உபி ஒடிசா போல் பின்தங்க வைத்து மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி குஜராத் நம்பர் ஒன் இடத்திற்கு வரும்வரை ஊரடங்கு நீட்டிப்பு தொடரும்.. என்ற அதிர்ச்சி தகவலையும் கப்சா பேட்டியில் எடப்பாடி கூறினார்

பகிர்