கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்ததை அடுத்து இன்று (ஆகஸ்டு 2) வீடு திரும்பினார்.

கடந்த மாதம் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோருக்கு தங்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அமிதாப் பச்சனுக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனது ரசிகர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அமிதப் பச்சன் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் அமித் ஷாவுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொடக்க அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது. எனது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ஆனால் மருத்துவர்கள் அறிவுரைக்கேற்ப மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்“ என அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.

இந்தியத்தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அமித் ஷா ஈடுபட்டார். கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக டெல்லி அரசுடன் இணைந்து தொடர் அலோசனை கூட்டங்கள் நடத்தியது, மருத்துவமனைகளில் ஆய்வு செய்ததது என களத்தில் இறங்கி அமித் ஷா பணிகளை மேற்கொண்டார்.

முன்னர் அமிதாப் தற்போது அமித்ஷா அடுத்தது கெட்-ரெடி மோடி என்று கப்சா மருத்துவர்கள் கொரோனா பேஷண்டுகளை மிரட்டி பணம் பறித்து வருவதாக கப்சா செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்