உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் 2 கோடி பேரை பாதித்துள்ளது கொரோனா வைரஸ். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை.
அரசியல் கட்சித்ததலைவர்களும் ஆடிப்போய்தான் இருக்கிறார்கள். உள்துறை அமைச்சர், தமிழக ஆளுநர், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என பலரையும் இந்த கொரோனா டச் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்களை இந்த கொரோனா எதுவும் செய்வதில்லை, நோயுடன் எதிர்த்து போராடி பல லட்சக்கணக்கானோர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித் ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என குஷ்பு ட்வீட் செய்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அமித்ஷாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தனிமைபடுத்திக்கொண்ட ஆளுநர் இதேபோன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ராஜ்பவனில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் 90க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவில் அமித்ஷா குணமடைய வேண்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார்.
கட்சி, கொள்கை ரீதியாக வேற்றுமைகள் இருந்தாலும் அமித்ஷாவிற்கு உடல்நல பாதிப்பு என்ற உடன் நலம் பெற வேண்டியுள்ளார் ராகுல்காந்தி அமித்ஷா நலம் பெற வாழ்த்திய ஸ்டாலின் இதேபோல திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் நலம் பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி அறிந்தேன். அவர் விரைந்து குணமடைந்து, நல்ல உடல்நலனைப் பெற்றிட வேண்டும் என விரும்புகிறேன்.
இதே போல ஆளுநர் விரைவில் நலம் பெறவும் வாழ்த்து கூறியுள்ளார் ஸ்டாலின். மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விரைவில் முழுநலம் பெற்று மீண்டும் தனது நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்த என்னுடைய மனமார்ந்த விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். கட்சி பேதமின்றி அமித்ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமடைய அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அரசு அனுமதி இன்றி ‘கொரோனில்’ என்ற பதஞ்சலி மருந்தை பாபா ராம்தேவ் வெளியிட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் 7 நாட்களில் கொரோனா தொற்று காணாமலே போய்விடும் என்று பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்தது. உலக நாடுகளை மிகவும் மோசமான அளவுக்கு பாதித்திருகிறது கொரோனா.
உலக நாடுகளால் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றன. மருத்துவ அறிவியல் உலகத்துக்கு கொரோனா பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதுவரை கொரோனாவுக்கு இதுதான் மருந்தாக பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எதுவும் கூறவில்லை. ஆனால் கொரோனாவை தங்களது மருந்துகள் மூலம் 100% குணப்படுத்திவிடலாம்.. அதற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று அறிவித்திருந்தது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்.
கண்டுபிடித்திருக்கும்? மருந்தின் பெயர் கொரோனில் ஸ்வாசரி. இந்த மருந்தை அமித்-‘சாவு’க்கு கொடுக்க பாபா ராம்தேவ் விரைந்தததாகவும், மோடி தனது பூனைப்படையை அனுப்பு துப்பாக்கி முனையில் ராம்தேவை தடுத்ததாகவும் கப்சா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.